கம்பராமாயணம் 4009 · கிட்கிந்தா 6.21

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாள் நெடுங்கண்ணி என் வரவு நோக்க , யான்
தாள் நெடும் கிரியொடும் தடங்கள் தம்மொடும்
பூணொடும் புலம்பினன் , பொழுது போக்கினேன் ;
நாண் நெடும் சிலை சுமந்து உழல நாணலேன் .

பொருள் · Meaning in Tamil

வாள் நெடுங்கண்ணி - வாள் போன்ற கூர்மையும் ஒளியும் படைத்த நீண்ட கண்களை உடைய சீதை; என் வரவு நோக்க - யான் வந்து மீட்பேன் என்று என் வரவுநோக்கி வருந்தியிருக்க; யான் - யானோ; தாள்நெடும் கிரியொடும் - அடிவாரங்களை உடைய நெடிது உயர்ந்த மலைகளொடும்; தடங்கள் தம்மொடும் - நீர்நிலைகளொடும்; பூணொடும் - அவள் களைந்து இட்ட அணிகலன்களோடும்; புலம்பினென் பொழுது போக்கி - புலம்பியவனாய்ப் பொழுதைக் கழித்து; நாண் நெடுஞ் சிலை சுமந்து - நாணொடு விளங்கும் நெடிய வில்லைச் சுமந்து கொண்டு; உழல்வென் - திரிபவனாய்; நாண் இலேன்- வெட்கமில்லாதவனானேன்.

தன்னை மீட்க இராமன் எப்படியும் வருவான் என்ற நம்பிக்கையுடன் எதிர் நோக்குவாள் என்பதால் 'என் வரவு நோக்க' என்றான். "சுருதி நாயகன், வரும் வரும் என்பது ஓர் துணிவால், கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்' (5077) எனப் பின்னர் வருவது காண்க. மலைகளொடும், நீர்நிலைகளொடும், அணிகலன்களொடும் புலம்பிப் பொழுதை வீணாகக் கழித்துக் கொண்டு, வில்லைப் பெற்றும் சீதையை மீட்காமல் இருத்தலால் 'நாணிலேன்' எனத் தன்னையே இழித்துக் கூறிக்கொண்டான், பகைவரை வெல்லப் பயன்படவில்லையெனில் நாணுடை வில்லும் வீரர்க்குச் சுமையாகும் என்பதால் 'சுமந்து' என்றான். நாண் - முன்னது வில்லின் நாண்; பின்னது நாணம் என்னும் பண்பைக் குறிக்கும். நாணிலாதவன் என்றதால் நாணுடை வில்லும் சுமையாயிற்று என்பதில் உள்ள சொல் நயம் காண்க. 'வன்தாள் சிலை ஏந்தி, வாளிக் கடல் சுமந்து, நின்றேனும் நின்றேன்; நெடுமரம்போல் நின்றேனே"; 'வில் உடையேன் சடாயு முன்னர் இராமன் புலம்புவதும் காண்க. வில் சுமையாவதை 'வில்லும் சுமக்கப் பிறந்தேன்' (1740) என்ற இலக்குவன் கூற்றும் உணர்த்தும். சீதையின் பிரிவால் இராமன் மலையொடு புலம்பி இருந்தமை 'குன்றே கடிது ஓடினை; கோமளக் கொம்பர் அன்ன என் விக காட்டுதி' (5313) என்பதாலும், தடங்களோடு புலம்பி இருந்தமை, "வண்ண நறுந் தாமரை மலரும், வாசக் குவளை நாள் மலரும், புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின், தரும் பொய்காய்! கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒரு கால் காட்டாயோ? (3732) என்பதனாலும் அறியலாம்.

உழல்வென்- வெளிப்படையாய் எங்கும் சுற்றித் திரிதலை உணர்த்தும். தாள் - மலையின் அடிவாரம். நாண் என்ற சொல்லை வேறொரு பொருளில் மீண்டும் பயன்படுத்தியதால் ஈற்றடி சொல்பொருள் பின்வருநிலை அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "While she of long, sword-bright eyes watches for my coming, I
  2. lament to tall mountains with their foothills, to the pools,
  3. to her ornaments, and pass the time, wandering about
  4. carrying this long, strung bow; I have no shame."

What the poem says

Cītai waits, sure he will come. He has spent his time weeping to hills, lakes and her jewels, carrying a bow he has not used. A bow that does not defeat the enemy is only a burden. The pun is on nāṇ, which means both bowstring and shame: he carries a bow with a string, yet has no shame.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷ neṭuṅkaṇṇi eṉ varavu nōkka, yāṉ
tāḷ neṭuṅ kiriyoṭum taṭaṅkaḷ tammoṭum
pūṇoṭum pulampiṉeṉ, poḻutu pōkki in
nāṇ neṭuñ cilai cumantu uḻalveṉ; nāṇ ilēṉ.