கம்பராமாயணம் 4010 · கிட்கிந்தா 6.22

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆறு உடன் செல்பவர் - வழியில் உடன் செல்பவர்களான; அம் சொல் மாதரை - அழகிய மொழியினை உடைய மகளிரை; வேறு உளார் வலி செயின் - வேறு எவரேனும் இடையில் வந்து துன்பம் செய்வார்களாயின்; விலக்கி - அதனை விலக்கி; வெம்சமத்து ஊறு உற - (அவ்வாறு விலக்குவதால்) ஏற்படும் கொடிய போரில் அவர்களுக்கு ஆபத்து உண்டாக; தம் உயிர் உகுப்பர் - தமது உயிரையும் அளிப்பர்; என்னையே தேறினள் துயரம் - (உலக இயல்பு அங்ஙனம் இருக்க) என்னையே நம்பியவளான சீதையின் துயரத்தை; நான் தீர்க்ககிற்றிலேன் - நான் தீர்க்கும் ஆற்றல் இல்லாதவனாய் உள்ளேன்.

தொடர்பில்லாதவராயினும் மகளிர்க்குப் பிறரால் துன்பம் வரின் தம் உயிரையும் பொருட்படுத்தாது உதவுதல் நல்லார் கடமையாகக் கொண்டிருக்க, தொடர்புடையவளாய் இராமனையே நம்பி வந்திருக்கும் சீதையின் துயர் களையும் ஆற்றல் இல்லாது நிற்கும் நிலை குறித்து அவன் இவ்வாறு வருந்திப் பேசினான். பிறரால் துன்புறுத்தப்படும் மகளிரைக் காக்கும் ஆடவரின் சிறப்பிற்கு ஓர் உதாரணமாகச் 'சடாயு' விளங்கினான். 'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' (5305) என அனுமனாலும் 'சரண் எனக்கு யார்கொல்?' என்று சானகி அழுது சாம்ப, 'அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!' என்று அருளின் எய்தி, முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய்யமர் முடித்து, தெய்வ மரணம் என்தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ? (6477) என இராமனாலும் சடாயு சிறப்பிக்கப்படுவதைக் காண்கிறோம். வழியில் மகளிர்க்கு வரும் இடுக்கண் நீக்காமை பழிக்குரிய செயலாவதை 'ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை, ஊறுகொண்டு அலைக்க, தன் உயிர் கொண்டு ஓடினோன்' என்ற பரதன் கூற்று உணர்த்தும் (2207).

ஊறு - துன்பம், ஆபத்து; முதனிலை திரிந்த தொழிற் பெயர் தீர்க்க கிற்றிலேன் - இதில் 'கில்' என்பது ஆற்றலை உணர்த்தும் இடைநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Those who travel with soft-spoken women on the road,
  2. if strangers do them violence, will hold them off and in fierce battle
  3. suffer wounds and pour out their lives; yet the grief of her
  4. who trusted in me alone, I cannot remove."

What the poem says

Good men give their lives to protect even women who are strangers to them, if they are attacked on the road; Caṭāyu, who died defending Cītai, is the great example. Yet Irāmaṉ cannot end the suffering of the wife who relied on him alone. Earlier, Paratan named failing to protect such a woman as one of the worst of sins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟuṭaṉ celpavar am col mātarai
vēṟu uḷār vali ceyiṉ vilakki, veñ camattu
ūṟuṟa tam uyir ukuppar; eṉṉaiyē
tēṟiṉaḷ tuyaram nāṉ tīrkkakiṟṟilēṉ.