கம்பராமாயணம் 4016 · கிட்கிந்தா 6.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றனன் இராகவன் - என்று கூறினான் இராமன்; இனைய காலையில் - இந்தச் சமயத்தில்; வன்திறல் மாருதி - மிக்க வலிமை வாய்ந்த அனுமன்; வணங்கினான் - (இராமனைத்) தொழுது; நெடுங் குன்று இவர் தோளினாய்- பெரிய மலையை ஒத்த தோள்களை உடையவனே! கூற வேண்டுவது - 'நான் உன்னிடம் கூற வேண்டியது; ஒன்று உளது - ஒன்று உண்டு; அதனைநீ உணர்ந்து கேள் எனா - அதை நீ கவனித்துக் கேட்பாயாக என்று....
இது முதல் 34வது பாடல் முடியக் குளகமாய் ஒரு தொடராய் இயைந்து வினை முடிபு கொள்ளும். வல்திறல் - ஒரு பொருட் பன்மொழி; இவர்தல் - ஒத்தல். தான் சொல்ல இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்பதால் 'உணர்ந்து கேள்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So spoke Irākavaṉ; at that moment
- mighty Māruti bowed and said, "You whose shoulders
- are like tall mountains! There is one thing I must say;
- listen to it and weigh it well."
What the poem says
Aṉumaṉ (Māruti, son of the Wind) now steps forward with advice. His speech runs as one long sentence through the next several verses, and he asks Irāmaṉ to listen carefully.