கம்பராமாயணம் 4015 · கிட்கிந்தா 6.27

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஐய ! நீ ஆற்றலின் , ஆறினேன் , அலது
உய்வனே ? எனக்கு இதின் உறுதிவேறு உண்டோ ?
வையகம் அத்து இப்பழி தீர , மாய்வது
செய்வன் ; நின் குறை முடித்து அன்றி செய்கலேன் .

பொருள் · Meaning in Tamil

ஐய- அன்பனே! நீ ஆற்றலின்- நீ ஆறுதல் கூறியதால், ஆற்றினேன் அலது - (எனது துன்பத்தை ஒருவாறு) தணித்துக் கொண்டேனே அல்லாமல்; உய்வென - (இப்பழி வந்தபின்) உயிர் தாங்கியிருப்பேனோ? எனக்கு இதில் உறுதி - எனக்குச் சாவினும் நல்லது; வேறு உண்டோ - வேறு உண்டோ (இல்லை); வையகத்து இப்பழி தீர - இவ்வுலகத்தில் எனக்கு ஏற்படும் இப்பழி நீங்க; மாய்வது செய்வென் - இறந்து போவேன்; நின்குறை முடித்தன்றி - (ஆனால்) உன்னுடைய குறையை முடித்துத் தராமல்; செய்கலேன் - (அவ்வாறு செய்யமாட்டேன்.

பழி நீங்க இறந்து படுதல் தன்னைப் பொறுத்தவரையில் ஏற்றது எனினும், சுக்கிரீவனுக்கு வாக்குக் கொடுத்தபடி அவன் மனைவியைக் கவர்ந்தவனைக் கொன்று அவளை மீட்டுத் தந்த பிறகே அச்செயலைச் செய்வதாகக் கூறுவது இராமன் கொண்ட வாய்மைப் பெருமையை உணர்த்தும். சுக்கிரீவன் இராமன் குறை தீர்த்தலையே முதன்மையாகக் கருதியது போல (3918) இராமனும் சுக்கிரீவன் துயர் நீக்க எண்ணியது நல்ல நட்பின் இயல்பை உணர்த்துகிறது.

அன்பின் முதிர்ச்சியால் இராமன் சுக்கிரீவனை 'ஐய!' என்று விளித்தான்; இலக்குவனை 'ஐய' (1736) என்றது போல. இப்பழி என்றது, சீதையின் துயரம் போக்காமையால் தனக்கு வரக்கூடிய பழியை. நின்குறை என்பது சுக்கிரீவன் அடைந்த துன்பம். வாலி, மனைவியையும் ஆட்சியினையும் கவர்ந்து கொண்ட நிலை. அக்குறை முடித்தலாவது - வாலியைக் கொன்று, சுக்கிரீவன் மனைவியையும் அரசுரிமையினையும் மீட்டுத் தருதலாகும். உய்தல் - உயிர் தாங்கியிருத்தல்; உறுதி - நல்லது. உய்வெனே, உண்டோ - ஏகார ஓகாரம் எதிர்மறைப் பொருளன. பிறர்துயர் நோக்கும் சான்றோர் பண்பை இப்பாடல் உணர்த்துகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Sir, because you have comforted me I have taken comfort; else
  2. could I live on? Is there anything better for me than death?
  3. To clear this shame from the world, I will
  4. die; but I will not do it before I have settled your trouble."

What the poem says

Irāmaṉ, calling Cukkirīvaṉ by the affectionate "Sir", as he calls Ilakkuvaṉ, says that only his friend's comfort keeps him alive. To wipe out the shame of failing Cītai, death would be best. But first he will keep his promise: kill Vālī and restore Cukkirīvaṉ's wife and throne. Each friend puts the other's trouble first, which is the mark of true friendship.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aiya! nī āṟṟaliṉ, āṟṟiṉēṉ, alatu
uyvaṉē? eṉakku itil uṟuti vēṟu uṇṭō?
vaiyakattu ip paḻi tīra, māyvatu
ceyvaṉ; niṉkuṟai muṭittu aṉṟic ceykalēṉ.