கம்பராமாயணம் 4019 · கிட்கிந்தா 6.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இமைப்பின் - (அவ்வரக்கர்கள்) கண் இமைக்கும் நேரத்தில்; எவ் உலகங்களும் - எல்லா உலகங்களையும், எய்துவர் - சென்று அடைவர்; அவ்வழி - தான் சென்ற அவ்விடங்களில்; மகிழ்ந்த யாவையும் - தாம் விரும்பிய பொருள்கள் எல்லாவற்றையும்; வவ்வுவர் - வலிந்து கவர்ந்து கொள்வர்; வெவ்வினை வந்தென - (செய்த செயல்களுக்கேற்பப் பயனூட்ட வரும்) கொடிய வினை வந்தது போல; வருவர் - (வருத்த) வருவர்; மீள்வர் - அவ்வினை, பயனை ஊட்டியபின் செல்வது போல, உயிர்களை வருத்திய பின்னர்த் திரும்பிச் செல்வர்; அவ் அவர் உறைவிடம் - அத்தன்மையை உடைய அரக்கர்கள் வாழும் இருப்பிடம்; அறியற்பாலதோ - நம்மால் அறியக்கூடியதோ? (அன்று.
அரக்கர் தாம் வேண்டும் இடத்திற்கு வேண்டியபோது சென்று பிறரை வருத்தி மீளும் இயல்பினராதலின் அவர்கள் தங்குமிடம் கணித்தற்கரிதாகின்றது. 'இமைப்பின்' என்பது காலவிரைவைக் காட்டிற்று; இமைப்பு - கண் இமைக்கும் கால அளவு. உயிர்களை அவை செய்தவினை தொடரும் என்பதைச் 'செல்லுறுகதியின் செல்லும் வினை எனச் சென்றதன்றோ' (28); என முன்னும் கூறப்பட்டது. 'தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு' என்பது (101) நாலடியார். இங்கு அரக்கர்க்கு வெவ்வினை உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "In the blink of an eye they reach any world;
- there they seize whatever pleases them;
- like cruel karma they come, and they go back again;
- is the dwelling of such as these something we can know?"
What the poem says
The demons are like karma itself. They strike suddenly wherever they choose, take what they want, and vanish again, just as the fruit of past deeds arrives, does its work and departs. Their home cannot easily be tracked.