கம்பராமாயணம் 4020 · கிட்கிந்தா 6.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகு வரம்பு இன்று - உலகம் எல்லையற்றதாக விரிந்துள்ளது; வரன்முறை நாடிட - (அரக்கர்களை) வரிசைப்படி ஒவ்வோர் இடமாகத் தேடுவதில்; அருமை உண்டு - இடர்ப்பாடு உண்டு; அளப்ப அரும் ஆண்டும் வேண்டும் - (அவ்வாறு தேடுதற்கு) அளவற்ற ஆண்டுகள் வேண்டும்; ஒரு முறையே - (அதனால்) ஒரே சமயத்தில்; உலகம் யாவையும் பரவி - எல்லா உலகங்களுக்கும் சென்று பரவி; திருஉறை - சீதை தங்கியிருக்கின்ற; வேறு இடம் - வேறிடத்தை, தேர வேண்டும் - தேடி அறிய வேண்டும்.
அரக்கர்கள் கணப்போதில் பல உலகங்களுக்குச் சென்று திரும்புவர் ஆதலின், ஒரு புறத்தே சென்று சீதையைத் தேடுகையில் அவர்கள் வேறுபுறம் கொண்டு மறைப்பார். ஒவ்வோர் இடமாய்த் தேடிச் செல்ல உலகமும் பெரிது; தேடுதற்கு ஆண்டுகள் பலவாகும். எனவே, ஒரே நேரத்தில் உலகெங்கும் பிரிந்து சென்று தேடுதல் வேண்டும் என்று அனுமன் உரைத்தான்.
திரு என்றது சீதாபிராட்டியை; வரன்முறை - வரிசைப்படி; யாவையும் - முற்றும்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "We must spread out all at once over every world
- and search for the other place where Tiru dwells;
- to search in order, one place at a time, has no end; the world
- is vast; it would take countless years."
What the poem says
Searching place by place would take endless years, and the demons could simply move Cītai elsewhere. The search parties must fan out over every world at the same moment. Tiru, the goddess of fortune, here means Cītai.