கம்பராமாயணம் 4027 · கிட்கிந்தா 7.5

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல ; மால்
தெருண்டு இலா மதத்த யானை சீறி நின்று சிந்தலால் ,
இருண்ட காழ் அகில் தடம் அத்து ஒடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்டபோது , அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே .

பொருள் · Meaning in Tamil

மால் தெருண்டிலாத - மயக்கம் தெளியாத; மத்த யானை- மதம் பொருந்திய யானைகள்; சீறி நின்று சிந்தலால் - சினங்கொண்டு நின்று தாக்கியதால்; இருண்ட காழ் அகில் தடத்தோடு - இருள் நிறம் கொண்ட வயிரம் பற்றிய அகில் கட்டைகளோடு; இற்று வீழ்ந்த சந்து - ஒடிந்து விழுந்த சந்தன மரங்கள்; வந்து உருண்டபோது - (மேலிருந்து) உருண்டு வந்த விழுந்த போது; அழிந்த தேன் - சிதைந்த தேன்; ஒழுக்கு பேர் இழுக்கின் - ஒழுகுதலினால் ஏற்பட்ட மிக்க வழுக்கலினால்; மருண்ட மாமலைத் தடங்கள் - யாவர்க்கும் மருட்சியை உண்டாக்கும் பெரிய அம்மலைகளின் வழிகள்; செல்லல் ஆவ அல்ல - எளிதில் கடந்து செல்லக் கூடியன அல்ல.

பலர்க்கும் அச்சத்தை விளைவிக்கும் மலையாதலின் 'மருண்ட மாமலை' எனப்பட்டது. 'குறவரும் மருளும் குன்றம்' என்பது மலைபடுகடாம். (275). யானையின் சீற்றம் வழிச்செல்வார்க்குப் பாதையை அரிதாக்கிவிடுகிறது என்றாலும், அம்மலைப்பகுதியிலுள்ள அகில், சந்தனம், தேன் என்ற வளமே உணர்த்தப்படுகிறது. யானைகள் சீற்றம் கொள்வதால் மரங்கள் முறிந்து விழுந்தன; மரங்கள் விழுவதால் தேன் கூடுகள் சிதைந்தன; அவை சிதைந்ததால் தேன் ஒழுகி வழிகள் வழுக்கல் உடையன ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The paths of those bewildering great mountains could not be walked:
  2. since elephants in must, their frenzy never clearing, raged and struck,
  3. sandal trees broke and fell along with dark, hard-cored agil trees,
  4. and as they came rolling down, the crushed honey flowed and made them very slippery.

What the poem says

The mountain paths are treacherous. Furious elephants smash the trees; falling sandal and agarwood crush the honeycombs; and the honey makes the trails slick. The verse also shows the riches of the hills: sandal, agarwood and honey in abundance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruṇṭa māmalait taṭaṅkaḷ cellal āva alla; māl
teruṇṭilāta matatta yāṉai cīṟi niṉṟu cintalāl,
iruṇṭa kāḻ akil taṭattoṭu iṟṟu vīḻnta cantu vantu
uruṇṭapōtu, aḻinta tēṉ oḻukku pēr iḻukkiṉē.