கம்பராமாயணம் 4028 · கிட்கிந்தா 7.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில் தடக்கை வீரர் - வில்லேந்திய பெரிய கைகளையுடை (இராமலக்குவராகிய) வீரர்கள்; ஏகுகின்ற இனைய குன்றமே - ஏறிச் செல்லும் இவ்வியல்பினதாகிய மலை; மினல் மணிக்குலம் - மின்னுதலையுடைய இரத்தினங்களின் தொகுதி, துவன்றி - நிறைந்து; வில் அலர்ந்து - ஒளி பரப்பி; விண்குலாய் - விசும்பளவும் பொருந்தி; அனல் பரப்பல் ஒப்ப - நெருப்பைப் பரவச் செய்தல் போல; மீது இமைப்ப - அம்மலை மீது ஒளி வீச; வந்து அவிப்ப போல - (அந்நெருப்பை விரைந்து) வந்து அவிப்பன போல; புனல் பரப்பல் ஒப்பு இருந்த - நீரைச் சொரிந்து பரப்புதலை ஒத்து இருந்த; பொன் பரப்பும் என்பர் - பொன் ஒளியைப் பரவச் செய்யும் என்று கூறுவர்.
அம்மலைகளில் இரத்தினங்கள் நெருப்புப்போல ஒளிவீச அந்நெருப்பை அவிக்கும் நீர்போலப் பொன்னொளி வீசும். இது தொடர்பு நவிற்சி அணியில் வந்த தற்குறிப்பேற்ற அணி. மினல் : மின்னல் - இடைக்குறை; பொன்னும், மணியும் நிறைந்து, பொன்னொளி தன்னுள் மணிகளின் ஒளியைத் தன்னிலடக்கி மேற்பட்டு விளங்கும் மலை வளம் கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Crowded with flashing gems that spread their light and reached the sky,
- twinkling above as though spreading fire, and, as if coming to quench it,
- the gold seemed to spread like pouring water, they say,
- on the mountain where the heroes of mighty bow-hands were going.
What the poem says
The hills are full of gems and gold. The gems blaze like fire, and the poet imagines the spreading glow of gold as water poured over that fire to put it out, so that the golden light overlays the light of the gems.