கம்பராமாயணம் 4029 · கிட்கிந்தா 7.7

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாடு எலாம் - மலைப்பக்கங்களிலெல்லாம்; மருவி ஆடும் வாவிதொறும் - யாவரும் (வந்து) பொருந்தி ஆடும் சுனைகளில்; வானயாறு வந்து பாயும் - ஆகாய கங்கை வந்து பாயும்; இருவி ஆர் தடங்கள் தோறும் - கதிர் அறுக்கப்பெற்ற தினைத்தாள்கள் பொருந்திய புனங்கள் தோறும்; ஏறு பாயுமாறு போல - காளை பாய்வது போல; அருவி பாயும் - மலையருவிகள் பெருகிப் பாயும்; முன்றில் அம்மலைத் தடத்து முற்றங்களில்; யானை ஒன்றிப் பாயும் - யானை பொருந்திப் பாயும்; ஏனலில் குருவி பாயும் - தினைக்கதிர்களில் குருவிகள் பாயும்; மந்தி ஓடி - குரங்குகள் தாவி; கோடு பாயும் - மரக்கிளைகளில் பாயும்.

மலையின் பல்வேறு சிறப்புகளை இப்பாடல் உணர்த்தும். "வாவி தோறும் வான யாறு பாயும்" என்றதனால் மலையின் உயர்ச்சி தோன்றும், 'இருவி ஆர் தடங்கள் தோறும் ஏறுபாயுமாறு போல அருவி பாயும்' என்றதால் மலைவாழ் மக்களின் தொழில், காளையின் உள்ளக் கிளர்ச்சி, மலையின் நீர் வளம் புலப்படும். 'முன்றில் யானை ஒன்றிப் பாயும்' என்பதில் அருவி வளத்தோடு யானையின் இன்ப விளையாட்டும் காண்க. 'ஏனலில் குருவி பாயும்' என்பதால் மலை வாழ்நர் குருவிகளை விலக்கவேண்டா அளவு மலைக்கண் கிடைக்கக்கூடிய உணவுப் பெருக்கமும் 'மந்தி கோடு பாயும்' என்பதால் கனிகளை உண்டு மகிழ்ந்து தாவி விளையாடும் அளவிற்கேற்பக் கிடைக்கும் கனி வளமும் புலப்படும். மேலே 3938 ஆம் பாடலில் 'யூகம்' என்பதற்குத் தந்த விளக்கத்தை இப்பாடலின் 'மந்தி'க்கும் கொள்க. அனைவரும் மகிழ்வதற்கேற்ற இடமாக மலை விளங்கியது. இருவி - கதிர் அறுக்கப்பெற்ற தினைத்தாள்; ஏனல் - தினை. 'பாயும்' என்னும் சொல் ஒரே பொருளில் பல இடங்களில் வந்தமையால் 'சொற்பொருள் பின்வருநிலை அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into every pool where people come to bathe, the river of the sky flows down;
  2. into every field of reaped millet stubble, like bulls leaping,
  3. the waterfalls leap; in the forecourts elephants gather and plunge; in the millet
  4. sparrows dart; and the monkeys run and leap among the branches, all around.

What the poem says

Everything in the hills "leaps" or "flows", the same verb repeated through the verse. The heavenly Gaṅgā feeds the pools, showing how high the peaks are. Waterfalls rush over the harvested fields like bulls. Elephants play in the cascades, sparrows feed freely on the millet, and monkeys leap through fruit-laden trees, a picture of plenty and delight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruvi āṭum vāvitōṟum vāṉa yāṟu pāyum, vantu;
iruvi ār taṭaṅkaḷtōṟum ēṟu pāyum; āṟupōl
aruvi pāyum muṉṟil oṉṟi yāṉai pāyum; ēṉalil
kuruvi pāyum; ōṭi, manti kōṭu pāyum, māṭu elām.