கம்பராமாயணம் 4030 · கிட்கிந்தா 7.8

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல , மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும் ; அன்றி , வானம் வில் இழுக்கும் ; வெண் மதி
கூன் இழுக்கும் ; மற்று உலாவு கோள் இழுக்கும் என்பவால்
வான் இழுக்கும் ஏலம் வாசம் மன்றல் நாறு குன்றமே .

பொருள் · Meaning in Tamil

வான் இழுக்கும் - வானில் உள்ள தேவர்களையும் (நறுமணத்தால் விரும்பி வருமாறு) இழுக்கின்ற; ஏல வாச மன்றல் நாறு - ஏலக் காய்களின் நறுமணம் வீசப்பெற்ற; குன்றம் - அம்மலை (தன்பால்); தேன் இழுக்கு சாரல் - தேன் பெருக்கால் வழுக்கும் இயல்புடைய சாரல்களில்; வாரி செல்ல - நீர்வெள்ளம் பெருகியதனால்; மீது செல்லும் நாள்மீன் - வானத்தில் செல்கின்ற விண்மீன்களை; இழுக்கும் - (கீழே) இழுக்கும்; அன்றி வானவில் இழுக்கும் - அல்லாமல், வானில் காணப்படும் இந்திரவில்லையும் இழுக்கும்; வெண்மதிக் கூன் இழுக்கும் - வெண்ணிறப் பிறைத் திங்களையும் இழுக்கும்; மற்று உலாவு கோள் இழுக்கும் - மேலும் வானத்தில் இயங்குகின்ற கிரகங்களையும் இழுக்கும்; என்பர் - என்று கூறுவர்.

அம்மலைகளில் வளரும் ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் வானில் உள்ள தேவர்களையும் அங்கு இறங்கி வரச்செய்யும். மலைச்சாரல்களில் பெருகி ஓடும் தேன் வெள்ளத்தால், வானிலுள்ள விண்மீன்களும், வானவில்லும், பிறைமதியும், மற்றுமுள்ள கிரகங்களும் இழுக்கப்பெறும் என்று சிறப்பிக்கப்படுகிறது. அம்மலைகளின் உயர்வும், அவற்றில் பெருகுகின்ற நீர்ப் பெருக்கின் மிகுதியையும் கூறுவதால் இது தொடர்பு உயர்வு நவிற்சி அணியாம். 'இழுக்கும்' எனப் பலமுறை ஒரே பொருளில் வருதலால் சொற்பொருள் பின் வருநிலை அணியும் அமைந்தது. வான்- இடவாகுபெயர்; நாள் மீன் - நட்சத்திரம்; பிறை வளைவுடையதாதலின் 'வெண்மதிக்கூன்' என்றார். வாச மன்றல் - ஒரு பொருட்பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the honey-slick slopes running with floods, they drag down the stars
  2. that move above, and drag down the rainbow, and drag down the curve
  3. of the white moon, and drag down the roaming planets too, they say,
  4. those hills fragrant with cardamom, that draw even heaven down.

What the poem says

The scent of cardamom on these hills draws even the gods down from heaven. The torrents of honey and water on the slopes are so high and mighty that they seem to pull down the stars, the rainbow, the crescent moon and the planets. The verse repeats "drag down" for effect and exaggerates both the height of the hills and the force of their streams.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṉ iḻukku cāral vāri cella, mītu cellum nāḷ
mīṉ iḻukkum; aṉṟi, vāṉavil iḻukkum; veṇ mati
kūṉ iḻukkum; maṟṟu ulāvu kōḷ iḻukkum eṉparāl
vāṉ iḻukkum ēl vāca maṉṟal nāṟu kuṉṟamē.