கம்பராமாயணம் 4031 · கிட்கிந்தா 7.9

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அன்னது ஆய - அத்தன்மையத்தான; குன்றின் ஆறு - மலை வழியிலே; சென்ற வீரர்- சென்ற இராமன் முதலிய வீரர்கள்; ஐந்தொடு ஐந்து உன்னல் ஆய - ஐந்தும் ஐந்தும் பத்து என்று எண்ணுதற்குரிய, யோசனைக்கும் உம்பர் ஏறி - யோசனை தூரத்திற்கும் மேலாக மலை மீது ஏறிச் சென்று; இம்பரில்- இவ்வுலகில்; பொன்னின் நாடு இழிந்தது அன்ன- பொன்மயமான தேவர் உலகம் இறங்கி வந்தாற்போன்ற; வாலி வாழ்பொருப்பு இடம்- வாலி வாழ்கின்ற (கிட்கிந்தை) மலையின் இடத்தை; துன்னினார்கள் - அடைந்தவர்களாய்; செய்வது என்னை - இனிச் செய்ய வேண்டுவது என்ன? என்று நின்று சொல்லுவார் - என்று நின்று (தமக்குள்) பேசிக் கொள்வாராயினர்.

வாலியின் ஆட்சியிலுள்ள கிட்கிந்தை பல வளங்களைப் பெற்றதாயும், காட்சிக்கினியதாயும் விளங்கியதால் தேவர் உலகமே இவ்வுலகில் வந்து இறங்கியதனை ஒத்து விளங்கியது என்றார். ருசியமுக மலையினின்று கிட்கிந்தைக்கு நீண்ட தூரம் மலைவழி நடந்தனர் என்பதை ஐந்தொடு ஐந்து உன்னலாய யோசனைக்கும் உம்பர் ஏறி' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heroes who went along that mountain road, having climbed
  2. more than five and five, that is ten, leagues,
  3. reached the mountain where Vālī lived, like the golden world come down to earth,
  4. and stood and said, "What shall we do?"

What the poem says

After a long climb of more than ten leagues from Mount Iruciyamukam, the party reaches Kiṭkintai, Vālī's mountain capital. It is so rich and beautiful that it looks like heaven come down to earth. There they stop to plan their next move.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu āya kuṉṟiṉ āṟu ceṉṟa vīrar, aintoṭu aintu
uṉṉal āya yōcaṉaikkum umpar ēṟi, imparil
poṉṉiṉ nāṭu iḻintatu aṉṉa vāli vāḻ poruppu iṭam
tuṉṉiṉārkaḷ; 'ceyvatu eṉṉai? ' eṉṟu niṉṟu colluvār.