கம்பராமாயணம் 4039 · கிட்கிந்தா 7.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கைக் கொடு கைத்தலம் புடைப்ப - (வாலி சினத்தால்) ஒரு கையினைக் கொண்டு மற்றொரு கையினைத் தட்ட; காவலின் திக்கயங்களும் - (அதனால் எழுந்த ஓசையால்) உலகினைத் தாங்கி நின்று காவல் புரியும் எட்டுத்திசை யானைகளும்; மதச் செருக்குச் சிந்தின - மதக் களிப்பாகிய செருக்கினை நீங்கின; உரும் இனம் உக்கன - இடியின் கூட்டங்கள் (தம்வலிமை குறைந்து) உதிர்ந்தன; உம்பரும் உலைந்த - தேவர் உலகங்களும் வருந்தின; நின்ற குன்றம் - (பெயர்தலின்றி) நிலை பெற்றிருந்த மலைகளும்; நெக்கன நெரிந்தன - பிளவுபட்டு நொறுங்கின.
வாலி தன் இரு கரங்களைத் தட்டி எழுப்பிய ஒலியால் வலிமை வாய்ந்த திக்கு யானைகளும், இடியின் கூட்டமும், மலைகளும் நிலைகலங்கின என்பதால் வாலியின் வலிமை மிகுதி உணர்த்தப்படுகிறது. நெக்குதல் - நெகிழ்ந்து பிளவுபடல். "நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்து வேருக்கு நெக்கு விடும்” என்பது நல்வழி (33).
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he struck palm against palm, even the elephants that guard
- the quarters shed the pride of their rut;
- the hosts of thunder fell to pieces; the heavens were shaken;
- and the mountains that stood firm cracked and were crushed.
What the poem says
Vālī claps his hands together in rage. The sound humbles the eight elephants that hold up and guard the directions, breaks up the thunderclouds, troubles the worlds of the gods and splits the mountains. Each detail adds to the picture of his strength before the fight begins.