கம்பராமாயணம் 4040 · கிட்கிந்தா 7.18

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '

பொருள் · Meaning in Tamil

வந்தனென்! வந்தனென்! - 'வந்து விட்டேன், வந்து விட்டேன்' என்ற வாசகம் - என்று வாலி கூறிய சொற்கள்; இந்திரி முதல் - இந்திரனுக்குரிய கிழக்குத் திசை முதல்; திசை எட்டும் கேட்டன - எட்டுத் திசைகளிலும் கேட்டன; மணி முடிச் சிகரம் தீண்டவே - (அவன் போருக்குக் கிளர்ந்து எழுந்தபோது) அவனது மணிகள் இழைக்கப்பெற்ற முடியின் உச்சி தம் மேல் பட்டதால்; சந்திரன் முதலிய - (வானத்தில்) சந்திரனைத் தம் தலைவனாகக் கொண்ட; தாரகைக் குழாம் சிந்தின - விண்மீன் தொகுதிகள் கீழே சிதறி வீழ்ந்தன.

வந்தனென், வந்தனென் - வெகுளியின் வந்த அடுக்குத் தொடர். இந்திரி - இந்திரனது திசையாகிய கிழக்கு. 'திசை எட்டும் கேட்டன' என்பது அவனது உரத்த குரலையும் 'மணிமுடிச் சிகரம் தீண்டத் தாரகைக் குழாம் சிந்தின' என்பது அவன் வடிவத்தின் உயர்வையும் பெருமையினையும் குறித்தன. சந்திரன் நட்சத்திரங்களின் தலைவனாதலின் 'சந்திரன் முதலிய தாரகைக் குழாம்' என்றார். தாரகாபதி, உடுபதி என்னும் பெயர்கள் சந்திரனுக்கு உரியன. உயர்வு நவிற்சி அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His words, "I have come! I have come!",
  2. were heard in all eight quarters, from Intiraṉ's east onward;
  3. and the throng of stars led by the moon
  4. was scattered as the peak of his jewelled crown brushed against them.

What the poem says

Vālī shouts that he is coming, and his voice carries to every direction, beginning with the east, ruled by Intiraṉ. The doubled cry marks his anger.

As he rises, his crown reaches the sky and knocks loose the stars. The moon is called their leader because it is lord of the stars. The first image shows how loud he is; the second shows how huge he is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vantaṉeṉ vantaṉeṉ ' eṉṟa vācakam,
intiri mutal ticai eṭṭum kēṭṭaṉa;
cantiraṉ mutaliya tārakaik kuḻām
cintiṉa, maṇi muṭic cikaram tīṇṭavē.