கம்பராமாயணம் 4045 · கிட்கிந்தா 7.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மலைக்குல மயில்! - மலையில் வாழும் சிறந்த மயில் போன்றவளே! விலக்கலை - என்னைத் தடை செய்யாதே; விடு விடு - என்னை விட்டுவிடு; அக்கடல் கடைந்து - அந்தப் பாற்கடலைக் கடைந்து; அமுது கண்டென - அமுதை எடுத்தாற்போல; விளித்துளான் உரம் கலக்கி - என்னைப் போருக்கு அழைத்த அச்சுக்கிரீவனின் வலிமையைக் குலையச் செய்து; உலக்க இன் உயிர் குடித்து - (அவன்) அழகிய (அவனது) இனிய உயிரைப் பருகி; ஒல்லை மீள்குவல் - விரைவில் திரும்பி வருவேன்; என - என்று (வாலி) கூற; மடந்தை கூறுவாள் - தாரை சொல்வாள்.
மயில் - உவமை ஆகுபெயராய்த் தாரையைக் குறித்தது. மயில் குறிஞ்சி நிலத்துப்பறவையாதலின், மலையில் வாழும் தாரைக்கும் ஏற்கும். மலைக்குல மயில் - அண்மைவிளி. விலக்கலை - எதிர்மறை ஏவல் வினைமுற்று; விடுவிடு - விரைவு பற்றி வந்த அடுக்குத் தொடர். உயிர் குடித்து - அச்செயலின் எளிமையைக் குறிக்கக் கூறப்பட்டது. உண்ணப்படாதது உண்ணப்படுவது போலச் சொல்லப்பட்டது மரபுவழுவமைதி. இலக்கணை என்றும் கூறலாம். அக்கடல் - அகரம் பண்டறிசுட்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Do not stop me; let go, let go! I will shake the strength of him who called me out,
- and as I once churned that ocean and drew out the nectar,
- I will drink his sweet life to the last and come straight back,
- peacock of the mountain clans," he said; and the young woman replied.
What the poem says
Vālī brushes Tārai aside. He addresses her as a peacock of the hills, since the peacock belongs to the mountain country where the monkeys live.
He promises to churn Cukkirīvaṉ's strength as he once churned the Ocean of Milk, and to drink his life as the gods drank the nectar. Saying he will "drink" a life is a conventional figure that stresses how easy he thinks the task will be. The last words introduce Tārai's answer.