கம்பராமாயணம் 4057 · கிட்கிந்தா 7.35

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'

பொருள் · Meaning in Tamil

தம்பியர் அல்லது - தன் தம்பிமார்களே அல்லாமல்; தனக்கு வேறு உயிர் - தனக்குத் தனியாக வேறோர் உயிர்; இம்பரின் இலது என - இவ்வுலகில் இல்லை என்று; எண்ணி - கருதி; ஏய்ந்தவன் - அவர்களோடு ஒன்றி நடப்பவனும்; அருளின் ஆழியான் - கருணைக் கடலுமான இராமன்; எம்பியும் யானும் உற்று - என் தம்பி சுக்கிரீவனும் யானுமாகப் பொருந்தி; எதிர்ந்த போரினில் - எதிர்த்து நடத்தும் போரில்; இடை அம்பு தொடுக்குமோ - இடையே புகுந்து என் மேல் அம்பினைத் தொடுப்பானோ? (தொடுக்கமாட்டான்).

தம்பியரைத் தன் உயிரெனக் கருதும் இராமன், உடன் பிறந்தார்க்கிடை ஏற்பட்ட போரில், பகைமையை நீக்கி ஒன்றுபடுத்த முயல்வானேயன்றி ஒரு பக்கம் சார்ந்து தனக்கெதிரே அம்பினைத் தொடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் வாலி 'எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பு இடை தொடுக்குமோ' என்றான். 'தள்ளா வினையேன் தனி ஆர் உயிராய் உள்ளாய்' (3608) என்ற அடிகள் இராமன் தம்பியரை உயிரெனப் போற்றி ஒன்றி வாழ்ந்ததை உணர்த்துவன. அருளின் ஆழி - கருணைக்கடல். இராமனைக் 'கருணைக்கடல்' (1257) எனக் கம்பர் முன்னரும் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He who thinks, 'Apart from my younger brothers I have no other life
  2. anywhere in this world,' and lives as one with them,
  3. in a battle where my younger brother and I have met and clashed,
  4. would he shoot an arrow from between us, that ocean of grace?"

What the poem says

Vālī knows how much Irāmaṉ loves his own brothers; he treats them as his very life. Such a man, Vālī reasons, would try to reconcile two quarrelling brothers, not take one side and shoot an arrow at the other from cover.

He calls Irāmaṉ an ocean of grace, a title the poem has given him before. Again, his trust sets up the tragedy that follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tampiyar allatu taṉakku vēṟu uyir
impariṉ ilatu ' eṉa eṇṇi ēyntavaṉ
empiyum yāṉum uṟṟu etirnta pōriṉil
ampu iṭai toṭukkumō, aruḷiṉ āḻiyāṉ? '