கம்பராமாயணம் 4059 · கிட்கிந்தா 7.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாலி - (இவ்வாறு தாரைக்கு ஆறுதல் கூறிய) வாலி; ஒல்லை - விரைவில்; செருவேட்டு - போரை விரும்பி; உயர் - (அப்போர் விருப்பத்தால்) உயர்ந்து; உம்பர் எல்லைக்கும் அப்பால் - தேவர் உலகின் எல்லைக்கு அப்பாலும்; இவர்கின்ற - கிளர்ந்து ஓங்கிய; வன்புய ஓங்கல் இரண்டினோடும் - வலிய தோள்களாகிய மலைகள் இரண்டினோடு; கீழ்பால் - கிழக்குத் திசையில்; தொல்லைக் கிரியின்தலை - பழமையான உதயகிரி என்னும் மலையின் உச்சியில்; தோற்றிய ஞாயிறு என்ன - தோன்றிய சூரியனைப் போல; மல்லல் கிரியின்தலை - வளம் பொருந்திய அந்த மலையின் மேல்; வந்தனன் - வந்து தோன்றினான்.
வீரர்களுக்குப் போர் என்று கேட்டதும் தோள்கள் பூரித்து விளங்குமாதலின் 'செருவேட்டு உயர் வல்புயம்' என்றார். 'போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங்கொள் திண்தோள்' (907) என்றதும் காண்க. ஒல்லை - இடைச்சொல்; தோள்களாகிய இரண்டு மலைகளுடன் ஒரு மலையின் தலையில் உதயகிரியின் தலை தோன்றும் சூரியன் போலத் தோன்றினான் என நயம்படக் கூறியுள்ளமை காண்க. வாலிக்குச் சூரியன் உவமை. புய ஓங்கல் - தோளாகிய மலை; உருவகம். நாளும் தோன்றும் பழமையுடைய மலையாதலின் 'தொல்லைக் கிரி' எனப்பட்டது. பல வளங்கள் கொண்டதாதலின் வாலிக்குரிய மலை 'மல்லல் கிரி' எனப்பட்டது. சூரியன் மைந்தன் எதிரே சூரியன் போல் வாலி தோன்றினான் என்ற முரண் நயம் நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Longing for a quick fight, with his two mighty mountain-like shoulders rising high,
- swelling beyond even the bounds of the heavens,
- Vālī came onto the crest of that rich hill, like the sun in the east
- appearing on the peak of the ancient mountain.
What the poem says
Vālī arrives on the hill outside the city. At the thought of battle a warrior's shoulders swell, and Vālī's rise above the heavens like twin mountains.
He appears on the summit like the sun rising over the eastern mountain where it shows itself every day. There is a pointed contrast here: Vālī looks like the sun as he faces Cukkirīvaṉ, who is the Sun's own son.