கம்பராமாயணம் 4060 · கிட்கிந்தா 7.38

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நின்றான் , எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்சத்
தன் தோள் வலியால் தனி மால் வரை சாலும் வாலி ,
குன்றூ ஊடு வந்து உற்றனன் ; கோள் அவுணன் குறித்த
வன் தூண் இடை தோன்றிய மா நரசிங்கம் என்ன .

பொருள் · Meaning in Tamil

தன் தோள் வலியால் - தனது தோள்களின் வலிமையால்; தகைமால் வரை சாலும் - சிறப்பு மிக்க பெரிய மலையை ஒத்து விளங்கும்; வாலி - வாலியானவன்; கோள் அவுணன் குறித்த - கொடிய அசுரனான இரணியன் சுட்டிக்காட்டிய; வன் தூணிடைத் தோன்றிய - வலிமை மிக்க தூணிடத்தே வெளிப்பட்டுத் தோன்றிய; மாநரசிங்கம் என்ன - பெருமைமிக்க நரசிங்க மூர்த்தி போல; எதிர் யாவரும் - தன்னைக் காண்கின்ற எல்லோரும்; நெஞ்சு நடுங்கி அஞ்ச - மனம் நடுங்கி அச்சம் கொள்ள; குன்றூடு வந்து - அம்மலையின் இடையே; உற்றனன் நின்றான் - வந்து சேர்ந்து நின்றான்.

வாலியின் தோள்களுக்கு மால்வரை உவமை. போருக்குக் கூவியழைத்த சுக்கிரீவன் எதிரே யாவரும் அஞ்சும் வகையில் தோன்றிய வாலிக்கு இரணியன் சுட்டிக்காட்டிய தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிங்கம் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He stood there, so that all who faced him trembled at heart and feared,
  2. Vālī, whose shoulders' strength made him like a great, noble mountain;
  3. he came through the hills and arrived, like the mighty Man-Lion
  4. who burst from the strong pillar the cruel asura pointed to.

What the poem says

Vālī takes his place on the hill facing Cukkirīvaṉ, terrifying everyone who sees him. His shoulders are like great mountains.

The comparison is to Narasiṁha, the Man-Lion form of Tirumāl, who burst out of a pillar when the demon king Iraṇiyaṉ pointed at it and mockingly asked whether his son's god lived even there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟāṉ, etir yāvarum neñcu naṭuṅki añca
taṉ tōḷ valiyāl takai māl varai cālum vāli,
kuṉṟūṭu vantu uṟṟaṉaṉ; kōḷ avuṇaṉ kuṟitta
vaṉ tūṇiṭait tōṉṟiya mā naraciṅkam eṉṉa.