கம்பராமாயணம் 4066 · கிட்கிந்தா 7.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில் தாங்கு வெற்பு அன்ன - வில்லை ஏந்திய மலையை ஒத்து; விலங்கு எழில்தோள - விளங்குகின்ற அழகமைந்த தோள்களை உடைய இலக்குவனே! மெய்ம்மை உற்றார் சிலர் - (இவ்வுலகில்) தவறாத நல்லொழுக்கம் பொருந்தியவர் ஒரு சிலரே ஆவர்; அல்லவரே பலர் - அந் நல்லொழுக்கம் கடைப் பிடிக்காதவரே பலர்; என்பது உண்மை - என்பதுதான் உண்மையாகும். பெற்றார் உழை - நம்மை நண்பராகப் பெற்றவரிடத்தில்; பெற்ற பயன் - பெறுதற்கேற்ற அளவில் காணப்படும் நல்ல பலனை; பெறும் பெற்றி அல்லால் - பெற்றுக் கொள்ளும் தன்மையல்லாமல்; நவை அற்றார் என்றலுக்கு - குற்றமற்றவர் என்று சொல்வதற்கு; ஆகுநர் ஆர்கொல் - உரியவர் யாருளர்?' என்றான் - என்று (இராமன்) கூறினான்.
உலகில் நல்லொழுக்கம் உடையார் சிலராகவும், அவ்வொழுக்கம் இல்லாதார் பலராகவும் இருப்பதால் நாம் நண்பர்களிடத்து உள்ள குறைகளை நோக்காது குணங்களை ஏற்றுக்கொண்டு பயன் அடைய வேண்டும் என்பது இராமனின் அறிவுரையாகும். 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்ற பழமொழியினையும் 'நல்லார் எனத்தான் நனிவிரும்பிக் கொண்டாரை, அல்லால் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும், நெல்லுக்கு உமி உண்டு, நீர்க்கு நுரையுண்டு, புல்லிதழ் பூவிற்கு முண்டு' (நாலடி - 221), 'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' (குறள் - 504) என்பனவற்றையும் காண்க.
வில்தாங்கு - வெற்பு - இல்பொருள் உவமை; ஆகுநர்; 'ந' - பெயரிடை நிலை. முன் இரண்டடிகளில் வேற்றுப் பொருள் வைப்பணி. பின் இரண்டடிகளில், பொதுவாகக் கூறிய கருத்து, சுக்கிரீவன் குற்றம் உடையவனாயினும் அவன் மாட்டுள்ள நற்குணத்தால் பெறக் கூடிய பயனைப் பெறுவதே செய்ய வேண்டுவது என்ற சிறப்புப் பொருளைத் தெரிவிப்பதால் பிறிதுமொழிதல் அணியாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You of the shoulders bright and beautiful, like mountains that bear bows: 'Those who hold to truth
- are few, and those who do not are many': that is the truth;
- other than taking from those we have won as friends the good that is there to be had,
- who is there who could be called free of fault?" he said.
What the poem says
Irāmaṉ continues. In this world the truly upright are few and the rest are many. One should not look for a friend without faults, because there is none; one should accept a friend's good qualities and draw benefit from them.
The thought echoes the proverb that if you look for faults you will have no kin, the Nālaṭiyār's lines that rice has husk and water has foam, and the Tirukkuṟaḷ's advice to weigh virtues against faults. By stating a general truth, Irāmaṉ indirectly makes his point about Cukkirīvaṉ.