கம்பராமாயணம் 4067 · கிட்கிந்தா 7.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரத் திறலோர் - வீரமும் போர்த்திறமும் வாய்ந்த இராமலக்குவர்; இன்ன இவை விளம்பும் வேலை - இத்தன்மையனவான சொற்களைப் பேசிக்கொண்டிருக்கையில்; தேரில் திரிவான் மகன் - தேர் மீதேறி வானம் எங்கும் சுற்றித் திரிபவனான சூரியன் மகனான சுக்கிரீவன்; இந்திரன் செம்மல் - இந்திரன் மகனான வாலி; என்று - எனக் கூறப்பெற்று; இப் பாரில் திரியும் - இந்த உலகில் சுற்றித் திரியும்; பனிமால் வரை அன்ன - குளிர்ந்த பெரியமலை போன்ற; பண்பார் - தன்மையினராய (சகோதரர்கள்); மூரித்திசையானை இரண்டு என - வலிமை மிக்க திசை யானைகள் இரண்டு எதிர்த்தாற்போல; முட்டினார் - ஒருவரோடொருவர் மோதிப் போர் புரிந்தனர்.
மலைபோல் பெருந்தோற்றமுடைய வாலி சுக்கிரீவர் திசை யானைகள் இரண்டு மோதிக் கொண்டது போல் மோதிக் கொண்டனர். மலையும், திசை யானைகளும் உவமை. தேரில் திரிவான் மகன் - சுக்கிரீவன்; இந்திரன் செம்மல் - வாலி. இருவரும் வெண்ணிற மேனியராதலின் 'பனி மால் வரை அன்ன பண்பார்' என்றார். பாரில் திரியும் பனிமலை இருப்பின் அதை போன்ற பண்பார் என்பதில் இல்பொருள்உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While those mighty heroes were saying such things,
- the son of him who roams in a chariot, and the scion of Intiraṉ, so called,
- like two great snowy mountains roaming this earth,
- clashed head-on like two mighty elephants of the quarters.
What the poem says
While Irāmaṉ and Ilakkuvaṉ talk, the fight begins. Cukkirīvaṉ, son of the Sun, and Vālī, son of Intiraṉ, both white-bodied and huge, are like two snow mountains walking the earth, an "impossible" comparison, since mountains do not walk. They crash together like two of the giant elephants that guard the directions.