கம்பராமாயணம் 4068 · கிட்கிந்தா 7.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குன்றோடு குன்று ஒத்தனர் - (வாலி சுக்கிரீவராகிய அவ்விருவரும்) மலையோடு மலை (மோதினால்) போன்று ஒத்துப் போரிட்டனர்; கோள் அரிக்கொற்ற வல் ஏறு - உயிர்கொள்ள வல்ல திண்மையும் வெற்றியும் வாய்ந்த வலிய ஆண் சிங்கம்; ஒன்றோடு சென்று ஒன்று எதிர் - ஒன்றோடொன்று நேராகப் போய் எதிர்த்து; உற்றனவேயும் ஒத்தார் - பொருதனவற்றையும் ஒத்து விளங்கினார்கள்; நின்றார் - போர்செய்ய நெருங்கி நின்றனர்; நெடுஞ்சாரி திரிந்தார் - நெடுநேரம் வலமுறை, இடமுறையாகச் சுற்றித் திரிந்தார்கள்; நிலம் - (அதனால்) நிலவுலகம்; வன்தோள் குயவன் - வலிய தோள்களை உடைய குயவன்; திரிமட்கலத்து ஆழி என்ன - சுற்றி விட்ட மண் பாண்டத்தை வனையும் சக்கரம்போல; திரிந்த - சுழலலாயிற்று.
எதிர்த்து நின்ற நிலையில் குன்றோடு குன்று எதிர்ப்பது போலும், இருசிங்கங்கள் எதிர்ப்பன போலும் எதிர்த்தனர். சாரி திரிந்ததில், திரிந்த வேகத்தால் நிலமானது குயவன் திகிரிபோலச் சுழலலாயிற்று என்பதாம். உவமை அணி. 'பாரில் திரியும் பனிமால் வரை பண்பார்' (3979) என்றதும் காண்க. 'குலால் மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல' (491); "கூட்டுற முடுக்கி விட்ட குயமகன் திகிரிபோல" (சீவக. 786) என்பன ஒப்புநோக்கத் தக்கன. சாரி - வட்டமாய் ஓடித்திரிகை; இது சாரிகை எனவும்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They were like mountain clashing with mountain; they were like two strong, victorious lions
- that advance one upon the other and meet head-on;
- they stood, they wheeled in long circles; and the earth spun
- like the wheel a strong-armed potter sets turning beneath his clay.
What the poem says
The duel begins in earnest. The brothers collide like mountains and like two lions charging each other. Then they circle round and round, and the speed of their circling makes the earth itself turn like a potter's wheel. The image of the potter's wheel set spinning appears elsewhere in this poem and in the Cīvakacintāmaṇi. Cāri means moving in circles, as fighters do when looking for an opening.