கம்பராமாயணம் 407 · பால 7.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
யாமும் எம் இருக்கை பெற்றேம் - தேவர்களாகிய நாங்களும் இழந்த எங்கள் இருப்பிடங்களை அடைந்துவிட்டோம்; உனக்கு இடையூறும் இல்லை - உனக்கோ அரக்கர்களால் இனி எந்த இடையூறும் உண்டாக மாட்டாது; கோமகற்கு இனிய தெய்வப் படைக்கலம் கொடுத்தி என்னா - அரசிளங் குமாரனாகிய ராமபிரானுக்கு இனிய தெய்வத் தன்மையுடைய படைக்கலங்களைக் கொடுப்பாயாக என்று; மாமுனிக்கு உரைத்து - மாபெரும் முனிவனான விசுவாமித்திரனுக்குச் சொல்லி; பின்னர் வில்கொண்ட மழை அனான் மேல் - பிறகு, வில்லை ஏந்திய மேகம் போன்றவனான இராமபிரானமீது; பூமழை பொழிந்து - மலர்மாரி பெய்து; வாழ்த்தி விண்ணவர் போயினார் - அவனை வாழ்த்தித் தேவர்கள் சென்றனர்.
'யாமும்' என்பதிலுள்ள 'உம்மை' எதிரது தழீஇய எச்ச உம்மை. யாம்: தேவர்களாகிய யாம். இருக்கை: இருப்பிடம் (உறையுள். பெற்றேம் என்பது தன்மைப்பன்மை வினைமுற்று. இடையூறு: தீங்கு. கோமகன்: அரசகுமாரன். கொடுத்தி: முன்னிலை ஏவல் வினைமுற்று “விற் கொண்ட மழை” இல்பொருள் உவமையாம். பூமழை: மலர்மாரி. நாங்களும் எங்கள் இடங்களைத் திரும்பப் பெற்றோம் என்றது, அரக்கர்கள் அத்தேவர்களை விரட்டி, அவர்களது இடங்களைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டனர். அரக்கர்கள் இனி அழிதல் திண்ணம் என்பதால் “யாமும் எம் இருக்கை பெற்றோம்” என்றார் கால வழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- We too have regained our dwellings, and for you there is no more hindrance;
- give the prince the sweet divine weapons, they said
- to the great sage; and then, on him who was like a rain-cloud holding a bow,
- the gods showered rain of flowers, blessed him, and went away.
What the poem says
The gods, who had been driven out of their homes by the Rākṣasas, celebrate. They say they have their dwellings back, speaking of a future certainty as though it had already happened, since the demons' downfall is now assured. They tell Vicuvāmittiraṉ that his sacrifice will no longer be disturbed.
They ask him to give the prince the celestial weapons, then shower flowers on Irāmaṉ, a dark cloud bearing a bow, bless him and depart. This verse closes the Tāṭakai episode.