கம்பராமாயணம் 406 · பால 7.76

Section பால காண்டம் / 7. தாடகை வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத
காசு உலாம் கனகப் பசும் பூண் காகுத்தன் கன்னிப் போரில்
கூசி வாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்று ஏ.

பொருள் · Meaning in Tamil

வாச நாள் மலரோன் அன்ன மாமுனி - மணம் பொருந்திய அன்றலர்ந்த தாமரை மலரில் இருக்கும் பிரமனுக்கு ஒப்பாகிய தவமுனிவனாகிய விசுவாமித்திரனுடைய; பணி மறாத - கட்டளையை மறுக்காத; காசு உலாம் கனகம் பைம்பூண் காகுத்தன் - மணிகள் பொருந்தியதும் பொன்னால் அமைந்ததுமாகிய பசிய அணிகலன்களை அணிந்துள்ள காகுத்தனாகிய இராமனது; கன்னிப் போரில் - இவ்விளம்போரில் (முதல் போர், வாள் அரக்கர் தங்கள் குலத்து - வாள்முதலிய படைக்கலங்களைக் கொண்ட அரக்கர் குலத்தினரது; உயிர் குடிக்க அஞ்சி - உயிரை உண்பதற்குப் பயந்து; கூசி ஆசையால் உழலும் கூற்றும் - இதுவரை நடுங்கி, (ஆனால்) ஆசையால் திரிந்து கொண்டிருந்த எமனும்; சுவை சிறிது அறிந்தது - கொஞ்சம் ருசி தெரிந்து கொண்டான்.

நாண்மலர்: அன்றலர்ந்த மலர் மலரோன்: பிரமதேவன் பிரமனைப் போல மன்னுயிர் அடங்கலும் படைப்பேன் எனத்தொடங்கிய முனிவனாதலின் பிரமனை உவமை கூறினாரென்க. பணி: கட்டளை. மறாத: மறுக்காத (எதிர் மறைப் பெயரெச்சம்). காசு: மணி. உலாம்: உலாவும் என்பதன் இடைக்குறை (பொருந்தும்). பசுமை+பூண்: பைம்பூண். காகுத்தன்: காகுந்தன் மரபில் தோன்றியவன் (இராமன். இந்திரன் காளையாகிச் சுமக்க - அரக்கர்களை வென்று இந்திரனுடைய ஆட்சியை மீட்டுக் கொடுத்த சூரியகுலத்து மன்னன்; இவன் பெயர் புரஞ்சயன் என்பது. காகுத்தன் என்பது இந்திரனாகிய காளையின் பிடரில் நின்றவன் என்னும் பொருள் உடையதாகும். கன்னிப்போர்: இளம்போர். இராவணனுக்கு அஞ்சி - அரக்கர் உயிர் உண்ண ஆசையிருந்தும் உண்ண இயலாத எமன் - இராமனது கன்னிப்போரில் சிறிது சுவை அறிந்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the maiden battle of Kākuttaṉ, who wears fresh ornaments of gold set with gems
  2. and never refuses the bidding of the great sage, like Brahmā of the fragrant fresh flower,
  3. Death too, who had shrunk back, afraid to drink the lives of the sword-bearing Rākṣasa clan,
  4. and roamed about with only his craving, got a little taste of it.

What the poem says

This was Irāmaṉ's first battle. He is called Kākuttaṉ, after an ancestor in the Solar line who fought the demons while riding on Intiraṉ in the form of a bull. Vicuvāmittiraṉ is likened to Brahmā, since he once set out to create a whole new world of his own.

Until now Yamaṉ, god of death, had longed to take Rākṣasa lives but held back, afraid of Irāvaṇaṉ. With Tāṭakai's death he finally gets a small taste of that feast, a hint of what is to come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāca nāḷmalarōṉ aṉṉa māmuṉi paṇi maṟāta
kācu ulām kaṉakam paim pūṇ kākuttaṉ kaṉṉip pōril
kūci vāḷ arakkartaṅkaḷ kulattu uyir kuṭikka añci
ācaiyāl uḻalum kūṟṟum cuvai ciṟitu aṟintatu aṉṟē.