கம்பராமாயணம் 4073 · கிட்கிந்தா 7.51

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

விண் மேலினரோ - (போர்புரியும் வாலி சுக்கிரீவர்) வானத்தில் மேல் உள்ளனரோ? நெடுவெற்பின் முகட்டினாரோ - நீண்டுயர்ந்த மலைகளின் சிகரங்களில் உள்ளனரோ? மண் மேலினரோ - நிலவுலகத்தில் உள்ளனரோ? புறமாதிர வீதியாரோ - புறத்தேயுள்ள திசைகளின் எல்லையில் உள்ளனரோ? கண் மேலினரோ - (அல்லது நமது) கண்களில் உள்ளனரோ? என யாவரும் காண நின்றார் - என்று எல்லோரும் காணும்படியாக எங்கும் திரிந்து நின்றவர்களாய்; புண்மேல் இரத்தம் பொடிப்ப - (அவர்கள்) உடல்களில் புண்கள் உண்டாகி அவற்றின் மேல் குருதி சிந்துமாறு; கடிப்பார் புடைப்பார் - ஒருவரையொருவர் கடிப்பாரும் குத்துவாரும் ஆனார்கள்.

அவ்வாலி சுக்கிரீவர் விண்மீதும், மலைகள்மீதும், திசைகளிலும் எல்லைகளிலும் சென்று பொருதனர்; ஓரிடத்தில் இல்லாது பல இடங்களில் சுழன்று திரிந்து போர் செய்ததால், பார்ப்பவர் கண்கள் பட்ட இடங்களில் எல்லாம் காணப்பட்டனர். அதனால் 'கண்மேலினரோ' என ஐயம் கொள்ளுமாறு போர் செய்தனர் என்றார். அவர்கள் மிக்க விரைவோடு பல இடங்களுக்குச் சென்று போர் புரிந்தனர் என்பதை முதல் மூன்றடிகளால் உணரலாம். புடைத்தல் - கையினால் தாக்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Are they up in the sky? Are they on the summits of the tall mountains?
  2. Are they on the earth? Are they out on the highways of the far directions?
  3. Are they in our very eyes?" So all who watched saw them stand and move,
  4. biting and striking until blood sprang out over their wounds.

What the poem says

The brothers move so fast that watchers cannot tell where they are: in the sky, on the peaks, on the ground, at the horizons. They seem to be wherever one looks, as if they were inside the onlookers' own eyes. Meanwhile they bite and pound each other until their wounds stream with blood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'viṇ mēliṉarō? neṭu veṟpiṉ mukaṭṭiṉārō?
maṇ mēliṉarō? puṟa mātira vītiyārō?
kaṇ mēliṉarō? ' eṉa yāvarum kāṇa niṉṟār,
puṇmēl irattam poṭippak kaṭippār, puṭaippār.