கம்பராமாயணம் 4074 · கிட்கிந்தா 7.52

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏழ் ஒத்து உடன் ஆம் , திசை எட்டு ஒடு இரண்டும் முட்டும்
ஆழிக் கிளர் ஆர்கலிக்கு ஐம்மடங்கு , ஆர்ப்பின் ஓசை ;
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய ,
ஊழிக் கிளர் கார் உரும் ஒத்தது , குத்தும் ஓதை .

பொருள் · Meaning in Tamil

ஓசை - (அவ்விருவரும்) ஆரவாரித்து எழுப்பிய பேரொலி; ஏழ் ஒத்து உடன் ஆம் - ஏழு கடல்களும் ஒருங்கு சேர்ந்தனவாய்; திசை எட்டொடு இரண்டும் முட்டும் - எட்டும் இரண்டுமாகிய பத்துத்திசைகளில் மோதும்போது; ஆழிக்கிளர் ஆர்கலிக்கு - கடல்களில் உண்டாகின்ற பேரொலிக்கு; ஐம்மடங்கு - ஐந்து மடங்கு மிக்கு ஒலிப்பதாயிற்று; பாழித் தடந்தோளினும் - வலிமை பொருந்திய பெரிய தோள்களிலும்; மார்பினும் - மார்பிலும்; கைகள் பாய - கைகள் விரைந்து செல்லுமாறு; குத்தும் ஓதை - (ஒருவரையொருவர்) குத்துதலால் ஏற்படும் ஓசை; ஊழிக்கிளர் - யுகமுடிவில் (உலகை அழிப்பதற்கு) எழுகின்ற; கார் இடி ஒத்தது - கருமேகங்களின் இடி முழக்கத்தை ஒத்திருந்தது.

போரிடுகையில் ஆரவாரித்தலும், ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொள்ளுதலும் வீரர் இயல்பாகும். ஆர்ப்பு, குத்து இவற்றால் எழுந்த ஓசைகளின் கடுமை இப்பாடலில் விளக்கப்பெற்றது. அவர்களின் ஆர்ப்பொலி ஏழுகடல்களும் ஒன்று சேர்ந்து பத்துத்திசைகளில், பரவுகையில் ஏற்படும் ஓசையினும் பல மடங்கு அதிகமாயிற்று என்பது முதல் இரண்டடிகளின் பொருள். ஐம்மடங்கு என்பது மிகுதியைக் குறித்து நின்றது. திசைகள் பத்தாவன - எட்டுத் திசைகளுடன் மேலும், கீழும் ஆகிய இரு திசையும் சேர்ந்தவை. ஆர்கலிக்கு - ஆர்கலியினும். உருபுமயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Five times greater than the roar of the oceans, all seven joined together
  2. and crashing against the eight directions and the two more,
  3. was the sound of their war cries; and as their fists struck mighty shoulders and chests,
  4. the noise of the blows was like the thunder of the dark clouds that rise at the end of an age.

What the poem says

The verse is about sound. The brothers' war cries are louder, many times over, than all seven seas combined crashing in every direction: the eight compass points plus up and down. "Five times" simply means far greater.

The thud of their punches on each other's shoulders and chests is like the thunder of the clouds that gather to destroy the world at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻ ottu uṭaṉ ām, ticai eṭṭoṭu iraṇṭum muṭṭum
āḻik kiḷar ār kalikku aim maṭaṅku, ārppiṉ ōcai;
pāḻit taṭan tōḷiṉum mārpiṉum kaikaḷ pāya,
ūḻik kiḷar kār iṭi ottatu, kuttum ōtai.