கம்பராமாயணம் 4075 · கிட்கிந்தா 7.53

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மிடல் வீரர் - வலிமையையுடைய வாலி சுக்கிரீவர்; மீச் சென்று - ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து; வாய் வெம் எயிற்றால் கடிப்ப - தம் வாயிலுள்ள கொடிய பற்களால் ஒருவரையொருவர் கடித்ததால்; அவ்வாய் எழு சோரி அது - கடித்த அவ்விடங்களிலிருந்து பெருகிய இரத்தமானது; ஆசைகள் தோறும் வீச - எல்லாத் திசைகளிலும் தெறித்ததால்; எவ்வாயும் எழுந்த - வானத்தில் எல்லாவிடங்களிலும் தோன்றிய; கொழுஞ்சுடர் மீன்கள்யாவும் - மிக்க ஒளியையுடைய விண்மீன்கள் எல்லாம்; செவ்வாயை நிகர்த்தன - (தம்மீது குருதி பட்டதால் தம் இயல்பான நிறம் மாறி) செவ்வாய் என்னும் கோளினை ஒத்து விளங்கின; மேகம் செக்கரை ஒத்த - மேகங்கள் செவ்வானத்தை ஒத்து விளங்கின.

கடித்த இடங்களிலிருந்து பெருகிய குருதியின் மிகுதி கூறப்பெற்றது. செவ்வாய் - நவக்கிரகங்களில் ஒன்று. சிவந்த நிறமுடையது. சோரி அது என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. செக்கர் - செவ்வானம். இது செக்கல் என்ற சொல்லின் ஈற்றுப் போலி; பின் பண்பாகு பெயராய்ச் செவ்வானத்தைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the mighty heroes leapt on each other and bit with the fierce teeth of their mouths,
  2. the blood that gushed from those wounds sprayed out in every direction,
  3. so that all the bright, rich stars that rose anywhere at all
  4. looked like the red planet Mars, and the clouds looked like the sunset sky.

What the poem says

The brothers bite each other so savagely that their blood sprays across the sky. The stars, splashed red, all look like the red planet Mars, and the clouds turn the colour of evening. The exaggeration conveys how much blood is shed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vev vāy eyiṟṟāl miṭal vīrar kaṭippa mīc ceṉṟu
av vāy eḻu cōriatu, ācaikaḷtōṟum vīca,
ev vāyum eḻunta koḻuñ cuṭar mīṉkaḷ yāvum,
cevvāyai nikarttaṉa; cekkarai otta, mēkam.