கம்பராமாயணம் 4076 · கிட்கிந்தா 7.54

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வெந்த வல் இரும்பிடை - (உலைக்களத்தில்) பழுக்கக் காய்ந்த வலிய இரும்பின் மீது; நெடுங்கூடங்கள் வீழ்ப்ப - பெரிய சம்மட்டிகளால் அடிக்க; சிந்தி எங்கணும் சிதறுவபோல் - (அதனின்றும் தீப்பொறிகள்) சிந்தி எல்லாவிடத்தும் சிதறுவன போல; பொறி தெறிப்ப - தீப்பொறி பறக்க; இந்திரன் மகன் புயங்களும் - இந்திரன் மகனாகிய வாலியின் தோள்களும்; இரவி சேய் உரனும் - சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன் மார்பும்; சந்த வல் நெடுந்தடக்கைகள் - அழகிய வலிய நீண்ட பெரிய கைகள்; தாக்கலின் தகர்வ - அறைவதனால் சிதைவுறுவன ஆயின.

கூடம் - சம்மட்டி. கொல்லர் இருவர் எதிர் எதிராக நின்று ஒவ்வொருவரும் ஒரு சம்மட்டி கொண்டு மாறி, மாறி அடிப்பாராதலின் 'கூடங்கள்' எனப்பன்மையால் கூறப்பட்டுள்ளது. வாலியின் தோள்களுக்கும் சுக்கிரீவனது மார்புக்கும் இரும்பும், அவர்களது கைகளுக்கு இரும்பை அடிக்கும் சம்மட்டியும் உவமை. சுக்கிரீவனும் வாலியும் ஒருவர்க்கொருவர் கைக்கொண்டு தாக்க அவர்களது தோள்களினின்றும், மார்பினின்றும் நெருப்புப் பொறிகள் தெறித்தன என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As when great sledgehammers fall on strong red-hot iron
  2. and sparks scatter and fly everywhere, so sparks flew
  3. as the shoulders of Intiraṉ's son and the chest of the Sun's child
  4. were battered under blows from those handsome, strong, long, broad arms.

What the poem says

The fight is compared to a smithy. Two smiths standing face to face take turns hammering hot iron, and sparks fly everywhere. Vālī's shoulders and Cukkirīvaṉ's chest are the iron, their arms the hammers, and the blows strike sparks from their bodies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1venta val irumpiṭai neṭuṅ kūṭaṅkaḷ vīḻppa
cinti eṅkaṇum citaṟuvapōl, poṟi teṟippa,
intiraṉ makaṉ puyaṅkaḷum, iravi cēy uraṉum,
canta val neṭun taṭak kaikaḷ tākkaliṉ takarva.