கம்பராமாயணம் 4077 · கிட்கிந்தா 7.55

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உரத்தினால் மடுத்து உந்துவர் , பாதம் இட்டு உதைப்பர் ;
கரம் அத்து இன் ஆல் விசைத்து எற்றுவர் ; கடிப்பர் ; நின்று இடிப்பர் ;
மரத்தினால் அடித்து உரப்புவர் ; பொருப்பு இனம் வாங்கிக்
சிரம் அத்து இன் மேல் எறிந்து உறுக்குவர் ; தெழிப்பர் ; தீ விழிப்பர் .

பொருள் · Meaning in Tamil

உரத்தினால் மடுத்து உந்துவர் - (அவ்விருவரும் ஒருவரையொருவர்) தத்தம் மார்பினால் தாக்கித் தள்ளுவார்கள்; பாதம் இட்டு உதைப்பர் - கால்களால் உதைப்பார்கள்; கரத்தினால் விசைத்து எற்றுவர் - கைகளால் வேகமாய்த் தாக்குவார்கள்; கடிப்பர் - வாயினால் கடிப்பார்கள்; நின்று இடிப்பர் - ஒருவர்க்கொருவர் எதிர்நின்று இடிப்பார்கள்; மரத்தினால் அடித்து உரப்புவர் - மரங்களைக்கொண்டு அடித்துக் கொண்டு அதட்டுவார்கள்; பொருப்பு இனம் வாங்கி - மலைக்கூட்டங்களைப் பெயர்த்து; சிரத்தின் மேல் எறிந்து - தலை மேல் வீசி; ஒறுக்குவர் - தண்டிப்பர்; தெழிப்பர் - ஆரவாரிப்பார்கள்; தீ விழிப்பர் - (சினத்தால்) நெருப்புப் போல விழித்து நோக்குவர்.

உந்துதல், உதைத்தல், எற்றுதல், கடித்தல், இடித்தல், மரம் கொண்டு அடித்தல், உரப்புதல், ஒறுக்குதல், தெழித்தல் என வாலியும் சுக்கிரீவனும் போரிடும் வகைகள் கூறப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They ram with their chests and shove; they plant their feet and kick;
  2. they lash out hard with their hands; they bite; they stand and pound;
  3. they beat each other with trees and roar threats; they pull up whole ranges of hills
  4. and hurl them on each other's heads to punish; they shout; they glare fire.

What the poem says

The verse simply lists the ways the brothers fight: shoving with their chests, kicking, striking, biting, pounding, clubbing with trees, shouting threats, throwing hills at each other's heads, roaring and glaring with eyes of fire. The quick string of verbs mirrors the pace of the brawl.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1urattiṉāl maṭuttu untuvar, pātam iṭṭu utaippar;
karattiṉāl vicaittu eṟṟuvar; kaṭippar; niṉṟu iṭippar;
marattiṉāl aṭittu urappuvar; poruppuiṉam vāṅkic
cirattiṉmēl eṟintu oṟukkuvar; teḻippar; tī viḻippar.