கம்பராமாயணம் 4080 · கிட்கிந்தா 7.58

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்ணகத்தன மலைகளும் - நிலத்தில் இருப்பனவாகிய மலைகளையும்; மரங்களும் - மரங்களையும்; மற்றும் கண்ணகத்தில் தோன்றிய - மேலும் கண்களில் பட்ட; யாவையும் - எல்லாப் பொருள்களையும்; கையால் - (அவர்கள்) தத்தம் கைகளால்; எண் நகப் பறித்து எறிதலின் - வலிமை விளங்கப் பெயர்த்தெடுத்து வீசி எறிந்ததனாலும்; எற்றலின் - (அவற்றால்) தாக்கியதாலும்; இற்ற - (அம்மலை முதலியன) முறிந்தனவாய்; விண்ணகத்தினை மறைத்தன - விசும்பிடத்தை மறைத்தன; மறிகடல் வீழ்ந்த - மேலும் மடங்கி விழும் அலைகளை உடைய கடலில் அவை வீழ்ந்தன.

எண் - ஈண்டு உள்ளத்தின் திண்மையைக் குறித்து நின்றது. பறித்தல் - வேருடன் பெயர்த்தெடுத்தல். வானமெங்கும் பரவி நிறைதலால் 'விண்ணகத்தினை மறைத்தன' என்றார். 'மண்ணகத்தன' என்பதை மரங்களுக்கும் இயைக்கலாம். கண் அகத்தில் - கண் முன்னிலையில் என்றபடி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mountains on the earth, the trees, and everything else
  2. that came before their eyes, they tore up by hand
  3. with fierce resolve and hurled and battered with, so that all of it broke;
  4. it blotted out the sky, and fell into the rolling sea.

What the poem says

The brothers rip up whatever they can see, mountains, trees and all, and use it to throw and to strike. The pieces fill the sky so thickly that it is hidden, and then fall into the sea. The word for resolve here refers to their firmness of mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇakattaṉa malaikaḷum, maraṅkaḷum, maṟṟum
kaṇṇakattiṉil tōṉṟiya yāvaiyum, kaiyāl,
eṇ nakap paṟittu eṟitaliṉ, eṟṟaliṉ, iṟṟa;
viṇṇakattiṉai maṟaittaṉa; maṟi kaṭal vīḻnta.