கம்பராமாயணம் 4079 · கிட்கிந்தா 7.57

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாலினால் உரம் வரிந்தனர் , நெரிந்து உக வலிப்பர் ;
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் ; கழல்வர் ;
வேலினால் அற எறிந்து என , விறல் வலி உகிரால் ,
தோலின் ஆர் உடல் , நெடுவரை முழை எனத் தொளைப்பர் .

பொருள் · Meaning in Tamil

வாலினால் உரம் வரிந்தனர் - ஒருவரையொருவர் தம் வாலினால் மார்பினை இறுகப் பிணித்தவராய்; நெரிந்து உக வலிப்பர் - (எலும்புகள்) நொறுங்கிப் பொடியாகும்படி இழுப்பர்; காலினால் நெடுங்கால் பிணித்து - தம் கால்களால் மற்றவர் நீண்ட கால்களை மாட்டி; உடற்றுவர் - இழுத்து வருத்துவர்; கழல்வர் - பின் அப்பிடிப்பினின்று கழன்று வெளிப்படுவர்; வேலினால் அற எறிந்தென - வேற்படையினால் உடலைத் தைக்குமாறு வீசி எறிந்தது போல; விறல் வலி உகிரால் - மிக்க வலிமை உடைய நகங்களால்; தோலினால் உடல் - தோலால் மூடப்பட்ட உடம்பினை; நெடுவரை முழை என - பெரிய மலையிலுள்ள குகை என்னும்படி; தொளைப்பர் - ஆழமாகத் துளைப்பார்கள்.

எறிந்தென - எறிந்தது என; இது தொகுத்தல் விகாரம். உகிருக்கு வேல் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They bind each other's chests with their tails and pull until the bones are crushed to bits;
  2. they lock long legs with their legs and wrench; they break loose;
  3. as if hurling spears to cut right through, with their mighty, conquering claws
  4. they bore into each other's skin-clad bodies like caves in a tall mountain.

What the poem says

The brothers fight as monkeys do. They wrap their tails round each other's chests and squeeze, hook legs and wrench, and break free. Their claws strike like thrown spears and gouge holes in each other's bodies as deep as mountain caves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāliṉāl uram varintaṉar, nerintu uka valippar;
kāliṉāl neṭuṅ kāl piṇittu uṭaṟṟuvar; kaḻalvar;
vēliṉāl aṟa eṟinteṉa, viṟal vali ukirāl,
tōliṉāl uṭaṉ, neṭu varai muḻai eṉat toḷaippar.