கம்பராமாயணம் 4083 · கிட்கிந்தா 7.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மலைந்த போது - (இவ்வாறு வாலி) கடுமையாகப் போர் செய்த பொழுது; இரவிசேய் இனைந்து - சூரியனின் மைந்தன் சுக்கிரீவன் மிக வருந்தி; ஐயன்மாடு அணுகி - இராமனிடம் வந்து; உலைந்த சிந்தையொடு - வருந்திய மனத்துடன்; உணங்கினன் வணங்கிட - வாட்ட முற்றவனாக, (இராமனைப்) பணிந்து நிற்க; உள்ளம் குலைந்திடேல் - (இராமன் சுக்கிரீவனை நோக்கி) 'மனம் வருந்தாதே; உமை வேற்றுமை தெரிந்திலம் - உங்களிடை (இன்னான் வாலி, இன்னான் சுக்கிரீவன் என்று) வேறுபாடு அறியாமல் போனோம்; கொடிப் பூ மிலைந்து செல்க - (வேறுபாடு தெரியுமாறு) நீ கொடிப்பூவினைச் சூடிச் செல்வாயாக'; என விடுத்தனன் - என்று சொல்லி (அவனை) அனுப்பினான்; மீட்டும் எதிர்த்தனன் - (அவ்வாறே கொடிப்பூவைச் சூடிச் சுக்கிரீவன்) மீண்டும் வாலியை எதிர்க்கலானான்.
வாலியும் சுக்கிரீவனும் நிறத்தாலும் வடிவத்தாலும் ஒத்து விளங்குவதால் போர் செய்கையில் இன்னின்னார் என்ற வேறுபாடு தெரியாமல் தவறிப்போய் அம்பு சுக்கிரீவன்மீது பட்டுவிடுமோ என்ற ஐயத்தால் இராமன் அம்பு எய்யாமல் இருந்தான். வேறுபாடு தெரியக் கொடிப் பூவைச் சூட்டிக் கொண்டால் வாலி மேல் அம்பு தொடுக்கலாம் என இராமன் கூற, அவ்வாறே அடையாள மாலையைச் சூட்டிச் சுக்கிரீவன் மீண்டும் வாலியை எதிர்க்கலானான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Vālī fought so, the Sun's son, in pain, came near the lord,
- and with a shaken mind, worn out, bowed down; and he said, "Do not
- lose heart; we could not tell you two apart; put on a garland of creeper flowers
- and go," and sent him back; and he faced Vālī once more.
What the poem says
Beaten, Cukkirīvaṉ retreats to Irāmaṉ and bows before him in distress. Irāmaṉ explains that he did not shoot because the two brothers look so alike in colour and shape that he could not tell them apart, and an arrow might have hit his friend.
He tells Cukkirīvaṉ to wear a garland of creeper flowers as a mark, and sends him back. Cukkirīvaṉ, wearing it, challenges Vālī again.