கம்பராமாயணம் 4085 · கிட்கிந்தா 7.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயிர்த்த சிந்தையன் - (தோற்றோடியவன் மீண்டும் வந்தது எப்படி என்று) ஐயுற்று மனத்தினனாகிய வாலி; அந்தகன் குலை குலைந்து அஞ்ச - யமனும் மனம் கலங்கி அஞ்சுமாறு; செயிர்த்து நோக்கினன் - (சுக்கிரீவனை) வெகுண்டு நோக்கியவனாய்; சினத்தொடு சிறுநகை செய்யா - கோபத்தோடு (இகழ்வாக) முறுவலித்துச் சிரித்து; வயிர்த்த கையினும் காலினும் - திண்மை மிக்க தன் கைகளாலும் கால்களாலும்; கதிர்மகன் மயங்க - கதிரவன் மகனாகிய சுக்கிரீவன் மயக்கமடையுமாறு; உயிர்த்தலந்தொறும் - (அவனது) உயிர் நிலையில் எல்லாம்; புடைத்தனன் - குத்தினான்; அடித்தனன் - அடித்தான்; உதைத்தான்.
அயிர்த்த சிந்தையன் - தோற்றோடிய சுக்கிரீவன் மீண்டும் வந்து போர்புரியக் காரணம், தன்னை வெல்லுவதற்குப் பெருந்துணை வலிமை பெற்றமையாலோ என்று ஐயுற்று மனநிலையைக் குறிக்கும். குலை குலைதல் - மனம் நடு நடுங்கல். வயிர்த்த - திண்மை, வயிரத்தின் தன்மைவாய்ந்த திண்மை. கதிர் - சூரியன்; கதிர் - ஒளி; பண்பாகுபெயராய்க் கதிரவனைக் குறித்தது. கையினும் காலினும் புடைத்தனன், அடித்தனன், உதைத்தான் என்பது நேர் நிரல் நிறை அணி. கையில் புடைத்தனன், அடித்தனன் எனவும் காலில் உதைத்தான் எனவும் நிரலே இயைக்க. சிறுநகை இகழ்ச்சி பற்றியது. சிறுநகை செய்யா - சிரித்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Suspicious in mind, he glared in rage so that even Death
- shook and was afraid; with anger and a thin, scornful smile,
- with his diamond-hard hands and feet, until the Sun's son reeled,
- he struck him at every vital spot; he beat him; he kicked him.
What the poem says
Vālī is puzzled and suspicious: how has the beaten Cukkirīvaṉ dared to come back? Perhaps he has found a powerful ally. He smiles in contempt and lays into his brother with fists and feet at every vital point until Cukkirīvaṉ is dazed.
The hands match "struck" and "beat", and the feet match "kicked", an orderly pairing the commentators note as a figure of speech.