கம்பராமாயணம் 4086 · கிட்கிந்தா 7.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆங்கு - அப்பொழுது; செங்கதிரோன் மகன் - சிவந்த கதிர்களை உடைய சூரிய மைந்தனாம் சுக்கிரீவன்; உயிர்ப்பொடும் உயிர் கக்கினான் - பெரு மூச்சுடனே உயிரைக் கக்கலானான்; செவிகளின் கண்ணின் - (அவனது) காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும்; எரிப் படலையோடு - நெருப்புத் தொகுதியோடு; உதிரத்தின் ஓதம் - குருதி வெள்ளம்; உக்கது - சிந்தியது; திக்கு நோக்கினான் - (அதனால் செயலற்றவனாய் இராமன் உள்ள) திசையை நோக்கினான்; இந்திரன் புதல்வன் - இந்திரன் புதல்வனாகிய வாலி; செருக்கி - செருக்குற்று; புக்கு மீக் கொடு நெருக்கினன் - மேல்மேலும் தாக்கி வருத்திக் கொண்டிருந்தான்.
உயிர்ப்பொடும் உயிர் கக்கினான் - உயிர் போய் விடும் என்னும்படி பெருமூச்சு விடலானான் என்பதாம். வாலியை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாதவனாய் இராமனது உதவியை நாடி அவனுள்ள திசை நோக்கித் தன் நிலையைப் புலப்படுத்தவே 'திக்கு நோக்கினான்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He gasped out his life along with his breath; from his ears and eyes
- there poured out then a flood of blood along with sheets of fire;
- the son of the red-rayed Sun looked toward one quarter; proudly
- the son of Intiraṉ pressed in and bore down on him from above.
What the poem says
Cukkirīvaṉ is close to death. He gasps as if his life were leaving him, and blood and fire stream from his ears and eyes. Unable to resist any longer, he looks toward the direction where Irāmaṉ is hiding, a silent plea for help, while Vālī, triumphant, keeps pressing the attack.