கம்பராமாயணம் 4087 · கிட்கிந்தா 7.65

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '

பொருள் · Meaning in Tamil

பற்றி எடுத்துப் பாரிடை எற்றுவென் - (இவனைப்) பிடித்து எடுத்துத் தரையில் மோதுவேன்; என்று - என்று எண்ணி; இளவல் - தன் தம்பியான சுக்கிரீவனது; கடித்தலத்தினும் - இடையிலும்; கழுத்தினும் - கழுத்திலும்; தன் இரு கரங்கள் மடுத்து - தனது கைகள் இரண்டையும் செலுத்தி; மீக் கொண்ட வாலிமேல் - (அவனை) மேலே தூக்கிய வாலியின் மேல்; இராகவன் - இரகு குலத் தோன்றலாகிய இராமன்; கோல்ஒன்று வாங்கி - அம்பொன்றை எடுத்து; தொடுத்து - வில்லில் பூட்டி; நாணொடு தோள் உறுத்து - வில்லின் நாணுடன் (தனது) தோளைப் பொருந்துமாறு செய்து; துரந்தான் - செலுத்தினான்.

இடையில் ஒரு கையினையும் கழுத்தில் ஒரு கையினையும் கொடுத்துச் சுக்கிரீவனை மேலே எடுத்துப் பூமியில் மோதிக் கொல்ல முயல்கையில் இராமன் வாலியின் மேல் அம்பைத் தொடுத்தான் என்பதில் சுக்கிரீவன் உயிரைக் காக்க வேண்டிய தேவை இராமனுக்கு ஏற்பட்டதை உணரமுடிகிறது. இளவல் - தம்பி; அல் - பெயர் விகுதி. கடிதலம் என்பது எதுகை நோக்கி, தகரவொற்று இரட்டித்தது. கோல் - அம்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking "I will seize him, lift him and dash him on the ground," on his younger brother's
  2. waist and neck Vālī set his two hands
  3. and lifted him high; at him Irākavaṉ took out a single shaft,
  4. fitted it, drew the string to his shoulder, and let it fly.

What the poem says

This is the decisive moment. Vālī grips Cukkirīvaṉ by the waist and the neck and lifts him high, meaning to smash him to death against the ground. To save his ally's life, Irāmaṉ, here called Irākavaṉ, scion of Raghu, sets an arrow to his bow, draws it back to his shoulder and shoots at Vālī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṭuttup pāriṭai eṟṟuvaṉ, paṟṟi ' eṉṟu iḷaval
kaṭittalattiṉum, kaḻuttiṉum, taṉ iru karaṅkaḷ
maṭuttu, mīk koṇṭa vālimēl, kōl oṉṟu vāṅkit
toṭuttu, nāṇoṭu tōḷ uṟuttu, irākavaṉ turantāṉ.