கம்பராமாயணம் 4089 · கிட்கிந்தா 7.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அலங்கு தோள் வலி அழிந்த - விளங்கும் தோள் வலிமை அழிந்து போன; அத்தம்பியை அருளான் - அந்தத் தம்பியின் மீது இரக்கம் கொள்ளாதவனாகி; வலம் கொள் பாரிடை - வலிமை கொண்ட நிலத்தில்; எற்றுவான் உற்ற - மோதிக் கொல்ல முற்பட்ட; போர்வாலி - போரிடுதலில் சிறந்த வாலியானவன்; கலங்கி - (அம்பு பட்டவுடன்) நிலை கலங்கி; கடைக்கால் - ஊழிக்கால இறுதியில்; வல் விசைக் கால் - வலிய வேகத்துடன் கூடிய பெருங்காற்று; கிளர்ந்து எறிவுற - எழுந்து வீசுவதால்; விலங்கல் மேருவும் - (நிலத்தினைத் தாங்கும்) மேரு என்னும் மலையும்; வேர் பறிந்தாலென - வேர் பறிக்கப்பெற்று விழுந்தது போல; வீழ்ந்தான் - (நிலத்தில்) விழுந்தான்.
கடைக்கால் - யுக முடிவாகிய ஊழிக்காலம். மேருவும் - உயர்வு சிறப்பும்மை. ஊழிக்காலக் காற்று இராமன் அம்பின் வலிமைக்கும் வேகத்திற்கும், மேருமலை வாலியின் பருமனுக்கும் வலிமைக்கும் உவமைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Showing no mercy to that younger brother whose shining shoulders' strength was spent,
- Vālī, about to dash him on the mighty earth, the warrior,
- was shaken; and as if the gale of the last age had risen and struck with fierce force
- and torn even Mount Mēru up by the roots, he fell.
What the poem says
At the very moment Vālī is about to kill his helpless brother, the arrow strikes. He topples like Mount Mēru, the world-mountain, uprooted by the great wind that blows at the end of time. The wind stands for the force and speed of the arrow, the mountain for Vālī's bulk and strength.