கம்பராமாயணம் 4090 · கிட்கிந்தா 7.68

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்தெனச் சாய்ந்தான் ,
வையம் மீதிடைக் கிடந்த , போர் அடுதிறல் வாலி ,
வெய்யவன் தரு மதலையை மிடல்கொடு கவரும்
கை நெகிழ்ந்தனன் ; நெகிழ்ந்திலன் , கடும் கணை கவர்தல் .

பொருள் · Meaning in Tamil

உரும் உற - பேரிடி விழுதலால்; சையம் வேரொடும் சாய்ந்தென - மலை அடியோடு நிலைபெயர்ந்து விழுந்தாற்போல; சாய்ந்து - விழுந்து; வையம் மீதிடைக் கிடந்த - நிலத்தின் மேல் கிடந்த; போர் அடு திறல் வாலி - போரில் பகைவரை அழிக்கும் வலிமை உடைய வாலி; வெய்யவன் தரு மதலையை - சூரியன் பெற்ற மைந்தனான சுக்கிரீவனை; மிடல் கொடு கவரும் - வலிமையுடன் இறுகப்பற்றிய; கை நெகிழ்ந்தனன் - கைகளின் பிடி நெகிழ்ந்து விட்டான்; கடுங்கணை கவர்தல் - (ஆனால் மார்பில் தைத்த) கொடுமை மிக்க அம்பினைப் பற்றுவதில்; நெகிழ்ந்திலன் - கை நெகிழாதவனாயினான்.

இராமன் தொடுத்த அம்பால் தளர்வுற்ற வாலி தன் கைகளைச் சுக்கிரீவனை இறுகப்பற்றிய பிடிப்பினின்று நெகிழ விட்ட நிலையிலும், தன் மார்பில் தைத்து ஊடுருவிய அம்பைப் புறத்தே போக விடாது வலிந்து பற்றிக் கொள்ளும் உறுதியும் வீரமும் படைத்தவனாய் விளங்கினான்.

இராமன் அம்பிற்கு இடியும், தரையில் விழுந்த வாலிக்கு அடியோடு நிலை பெயர்ந்து வீழ்ந்த மலையும் உவமைகள். கை ப்பம் நெகிழ்ந்திலன் கடுங்கணை கவர்தல் - முரண்தொடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Falling as a mountain falls, roots and all, when the thunderbolt strikes it,
  2. Vālī, lying on the earth, he of killing might in battle,
  3. let slip the hand that had gripped the son born of the Sun;
  4. but he did not let slip his grip on the cruel arrow.

What the poem says

Vālī crashes to the ground like a mountain struck by lightning. His hands release Cukkirīvaṉ, but he will not release the arrow: he clutches it and keeps it from passing out through his body. Even in his fall he shows his strength and courage. The contrast between the hand that lets go and the hand that holds on is deliberate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caiyam vēroṭum urum uṟac cāynteṉac cāyntu,
vaiyam mītiṭaik kiṭanta, pōr aṭu tiṟal vāli,
veyyavaṉ taru matalaiyai miṭal koṭu kavarum
kai nekiḻntaṉaṉ; nekiḻntilaṉ, kaṭuṅ kaṇai kavartal.