கம்பராமாயணம் 4095 · கிட்கிந்தா 7.73

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

ஆம் இது - (என் மார்பில்பட்ட) இந்தப் படைக்கலம்; நேமி தான் கொலோ - திருமாலுடைய சுதர்சனம் என்னும் சக்கராயுதம் தானோ? நீலகண்டன் நெடுஞ்சூலம் ஆம் கொலோ - (விடமுண்டு) கறுத்த மிடற்றையுடைய சிவபிரானது நெடிய சூலாயுதம் இஃது ஆனதோ? அன்று எனில் - அவைஅல்ல என்றால்; குன்று உருவு அயிலும் - கிரவுஞ்சம் என்னும் மலையினைத் துளைத்துச் சென்ற முருகனது வேலாயுதமும்; நாம இந்திரன் வச்சிரப்படையும் - பகைவர்க்கு அச்சத்தைத் தரும் இந்திரனுடைய வச்சிரப்படையும்; என் நடுவண் - எனது மார்பில்; போம் எனும் துணை போதுமோ - நுழைந்து செல்லும் என்று சொல்லத்தக்க வலிமை அமைந்ததோ? யாது? - இது யாதோ; எனப் புழுங்கும் - (தெரியவில்லையே) என்று மனம் தவிப்பான்.

முன்பாடலில் தன்மீது அம்பு எய்தவர் யாரோ என்று ஐயுற்றுக் கலங்கிய வாலி, இப்பாடலில் தன் மார்பில் தைத்த படைக்கலம் எத்தகையதோ என ஐயுற்று மனம் வெதும்பினான். சக்கரப்படையாயின் வட்ட வடிவினதாய், எதிர்ப்பட்டதை முழுவதுமாய் அறுத்துச் செல்லும் இயல்பினதேயன்றி மார்பில் தைத்து ஊடுருவிச் செல்லும் தன்மையதன்று; சூலப்படை மூவிலையும் நீண்ட காம்பும் கொண்டதாய், உருவ அமைப்பிலேயே வேறுபட்டு நிற்கும். இவை இரண்டுமில்லையென்றால், கிரவுஞ்சமலையைப் பிளந்த முருகனது வேலும், மலைச்சிறகரிந்த இந்திரனது வச்சிரப்படையும் மலையினும் வலிய தன் மார்பைத் தாக்கிச் செல்லும் அளவு வன்மை உடையன அல்ல. எனவே, தன் மார்பில் தைத்து வருத்தும் படைக்கலம் யாதாக இருக்கும் என வாலி மயங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Is it the discus itself? Is this the long trident
  2. of the Blue-throated One? If not, the spear that pierced the mountain,
  3. or the thunderbolt weapon of dread Intiraṉ: would they have strength enough
  4. to be said to pass through my middle? What is it?" he frets.

What the poem says

Vālī now wonders what weapon could have pierced him. Tirumāl's discus slices rather than stabs; Civaṉ's trident has three prongs and looks quite different. Murukaṉ's spear, which split the Krauñca mountain, and Intiraṉ's thunderbolt, which clipped the wings of the mountains, could not pierce a chest harder than any mountain. He is baffled.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nēmitāṉ kolō? nīlakaṇṭaṉ neṭuñ cūlam
ām itu, ām kolō? aṉṟu eṉiṉ, kuṉṟu uruvu ayilum,
nāma intiraṉ vaccirap paṭaiyum, eṉ naṭuvaṇ
pōm eṉum tuṇai pōtumō? yātu? ' eṉap puḻuṅkum.