கம்பராமாயணம் 4096 · கிட்கிந்தா 7.74

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வில்லினால் துரப்ப அரிது , இவ் வெம் சரம் ! ' என வியக்கும் ;
'சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் ? ' என்னும் ;
பல்லினால் கடிப்புறும் பல காலும் ; தன் உரத்தைக்
கல்லி , ஆர்ப்பொடும் பறிக்கும் அப் பகழியைக் கண்டான் .

பொருள் · Meaning in Tamil

பலகாலும் பல்லினால் பறிப்புறும் - (மார்பில் பட்ட அம்பினைப்) பலமுறையும் பற்களினால் கடித்து இழுப்பான்; தன் உரத்தைக் கல்லி - தன் மார்பை அகழ்ந்து; ஆர்ப்பொடும் பறிக்கும் - பெரும் ஆரவாரத்தோடு பறிப்பவனானான்; அப்பகழியைக் கண்டான் - (அங்ஙனம் செய்கையில்) அந்த அம்பைக் கண்டவனான வாலி; இவ்வெஞ்சரம் - 'இந்தக் கொடிய அம்பினை; வில்லினால் துரப்ப அரிது - வில்லினால் எய்வது அரியதாகும்; என வியக்கும் - என்று வியப்படைவான்; சொல்லினால் - (மந்திர) மொழிகளின் துணையால்; நெடுமுனிவரோ தூண்டினார் - பெருமைமிகு முனிவர்கள் இதனை ஏவினார்களோ?' என்னும் - என்று கருதுவான்.

அம்பு என்று அறிந்த நிலையில் வாலி கூறியது. பகழியைப் பறிக்கும் அவன் முயற்சி இப்பாடலில் கூறப்படுகிறது. எய்யப்பட்ட அம்பின் ஆற்றலைப் பற்றி எண்ணலானான். நெடுந்தூரத்திலிருந்து அல்லது கண்ணில் படாத நிலையிலிருந்து அம்பினை மிக அரியநிலையில் செலுத்தியது எண்ணி வியந்தான். மந்திர மொழிகளைக் கூறி முனிவர்கள் ஏவி இருப்பார்களோ என ஐயுற்றான். இதனால் வில்லம்பினும் சொல்லம்பின் வலிமை கூறப்பெற்றது. 'வில்லோர் உழலும் பகை கொளினும் கொள்ளற்க, சொல்லேர் உழவர் பகை' (872) என்னும் குறள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Such a cruel arrow could hardly be shot from a bow!" he marvels;
  2. "Did great sages send it with the power of their words?" he says;
  3. again and again he tears at it with his teeth; he digs into his own chest
  4. and wrenches with a roar; and then he saw that it was an arrow.

What the poem says

Vālī bites at the shaft and claws at his chest, roaring as he pulls. Now that he can see it is an arrow, he marvels that any bow could fire such a thing, from so far or so unseen. He guesses that sages must have launched it with mantras.

The thought recalls the Tirukkuṟaḷ's warning that the enmity of men who plough with words is worse than that of men who plough with bows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'villiṉāl turappa aritu, iv veñ caram! ' eṉa viyakkum;
'colliṉāl neṭu muṉivarō tūṇṭiṉār? ' eṉṉum;
palliṉāl paṟippuṟum pala kālum; taṉ urattaik
kalli, ārppoṭum paṟikkum ap pakaḻiyaik kaṇṭāṉ.