கம்பராமாயணம் 4098 · கிட்கிந்தா 7.76

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓங்கு அரும் பெருந் திறல் உடை மனத்தன் , உள்ளத்தன் ,
வாங்கினான் மற்று அவ் வாளியை , ஆளிபோல் வாலி ;
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் ,
வீங்கினார்கள் தோள் ; வீரரை யார் வியவாதார் ?

பொருள் · Meaning in Tamil

ஆளி போல் வாலி - ஆண்சிங்கம் போன்ற வாலி; ஓங்கு அரும் பெருந்திறலினும் - உயர்ந்த, அரிய பெரிய ஆற்றலினாலும்; காலினும் - கால்களினைப் பயன்படுத்தியும்; அவ்வாளியை - அந்த அம்பினை; உரத்தின் வாங்கினான் - மார்பினின்று பிடுங்கினான்; ஆங்கு நோக்கினர் - அங்கு அதைப் பார்த்தவர்களான; அமரரும் அவுணரும் பிறரும் - தேவர்களும், அசுரர்களும், மற்றவர்களும்; தோள் வீங்கினார்கள் - தோள்கள் பூரிக்கப் பெற்றார்கள்; வீரரை யார் வியவாதார் - வீரர்களை வியந்து பாராட்டாதவர்கள் யார்? (யாருமில்லை என்றபடி).

இராம பாணத்தைப் பறித்தெடுத்த வாலியின் ஆற்றலை 'ஓங்கு அரும் பெருந்திறல்' எனக் கம்பர் பாராட்டுதல் காண்க. வீரர்களை வேறுபாடின்றி யாவரும் பாராட்டுவர் ஆதலின் 'வீரரை யார் வியவாதார்?' என்றார். வேற்றுப்பொருள் வைப்பணி. மற்று - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his towering, rare, immense strength and with his feet, from his chest
  2. Vālī, like a lion, pulled out that arrow;
  3. the immortals, the asuras and all the others who watched there
  4. felt their shoulders swell; who would not marvel at heroes?

What the poem says

Vālī, like a lion, finally tears Irāmaṉ's arrow out of his chest. Even the gods, demons and others watching feel their shoulders swell with admiration, as warriors do at the sight of courage. The poet adds a general truth: everyone, friend or foe, admires a true hero.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṅku arum perun tiṟaliṉum, kāliṉum, urattiṉ
vāṅkiṉāṉ maṟṟu av vāḷiyai, āḷipōl vāli;
āṅku nōkkiṉar amararum avuṇarum piṟarum,
vīṅkiṉārkaḷ tōḷ; vīrarai yār viyavātār?