கம்பராமாயணம் 4099 · கிட்கிந்தா 7.77

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ ?
காடும் மா நெடு விலங்கலும் கடந்தது ; அக் கடலின்
ஊடு போதல் உற்று அதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் .

பொருள் · Meaning in Tamil

காடு, மாநெடும் விலங்கல்கள் - காடுகளையும், மிகப் பெரிய மலைகளையும்; கடந்தது - தாண்டியதாய்; அக்கடலின் ஊடு போதல் - அந்தக் கடலில் சென்று சேர; உற்றதனை ஒத்து - தொடங்கியதைப் போன்று; உயர்ந்துளது உதிரம் - (வாலியின் மார்பினின்று) உயர்த்தெழுந்த இரத்தவெள்ளம்; மோடு தெண் திரை - உயர்ந்த தெளிந்த அலைகள்; முரிதரு கடல் என முழங்கி - மடங்கப் பெற்ற கடல் போல ஆரவாரம் செய்து கொண்டு; ஈடு பேர் உலகு - வலிய, பெரிய (பல) உலகங்களை; இறந்துளது ஆம் எனற்கு எளிதோ - கடந்து சென்றதாம் என்று கூறுவதற்குரிய எளிமையுடையதாகுமோ?

வாலி அம்பினைப் பறித்து எடுத்த அளவில் மார்பினின்று பெருகிய குருதி வெள்ளம் காடு மலைகளைக் கடந்து சென்றது; கடல்போல் முழங்கிப் பல உலகங்களைக் கடந்து சென்றது. குருதிப் பெருக்கின் மிகுதியைப் பாடல் புலப்படுத்துகிறது. உயர்வு நவிற்சி அணி. மோடு - உயர்ச்சி; ஈடு - பெருமை; அக்கடல் - 'அ' உலகறி சுட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Roaring like the sea whose clear, towering waves break and roll,
  2. is it easy even to say it passed beyond the great, mighty worlds?
  3. It crossed the forests and the vast, tall mountains, and rose up
  4. as if it had set out to flow into that ocean: the blood.

What the poem says

As the arrow comes out, Vālī's blood gushes in a flood. It roars like the sea, sweeps over forests and mountains as if racing to join the ocean, and seems to pour beyond the worlds themselves; even that, the poet says, hardly describes it. The exaggeration conveys the size of the wound and of the man.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūṭu teṇtirai muritaru kaṭal eṉa muḻaṅki
īṭu pēr ulaku iṟantuḷatu ām eṉaṟku eḷitō?
kāṭu mā neṭu vilaṅkalkaḷ kaṭantatu; ak kaṭaliṉ
ūṭu pōtal uṟṟataṉai ottu uyarntuḷatu utiram.