கம்பராமாயணம் 4104 · கிட்கிந்தா 7.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெள்கிடும் - (வாலி தன் நிலையை எண்ணி) நாணம் கொள்வான்; மகுடம் சாய்க்கும் - (நாணத்தால்) கிரீடம் அணிந்த தலையைச் சாய்ப்பான்; வெடிபடச் சிரிக்கும் - வெடிப்பதுண்டது போல சிரிப்பான்; மீட்டும் உள்கிடும் - நடந்ததைக் குறித்து மீண்டும் சிந்திப்பான்; இதுவும் தான் ஓர் ஓங்கு அறமோ - 'இப்படி அம்பு செலுத்துதலும் ஒரு சிறந்த தருமமாகுமோ?' என்று உன்னும் - என்று எண்ணுவான்; முள்கிடும் குழியில் - முழுகி அழுந்தத் தக்க படுகுழியில்; புக்க மூரி வெங் களி நல் யானை - (வீழ்ந்து) அகப்பட்டுக் கொண்ட வலிய கொடிய மதங் கொண்ட சிறந்த யானை; தொள்கொடும் கிடந்தது என்ன - சேற்றுடன் கிடந்தது போல; துயர் உழந்து அழிந்து சோர்வான் - துன்புற்று தன் வலிமை அழிந்து தளர்ச்சி அடைவான்.
வீழ்ந்த வாலியின் மனநிலையைப் பாடல் புலப்படுத்தும். இராமன் அறத்தின் வடிவம் என்று வாலி எண்ணியதால் 'இப்படி அம்பு செலுத்துவதும் ஒரு சிறந்த அறமாகுமா?' என எண்ணி மயங்கினான். முள்கிடுங்குழி - பெரும் பள்ளம், படுகுழி. யானை பிடிப்போர் பள்ளம் தோண்டிப் பழக்கிய பெண் யானையை ஒருபுறம் நிறுத்தி வைக்க, ஆண் யானை, பிடியைச் சேரும் ஆர்வத்தில் விரைந்து வந்து குழியில் விழ; அதனைப்பிணித்து மேலேற்றிச் செல்வர். அவ்வாறு இராமன் செய்த தந்திரத்தால் வாலி அகப்பட்டு வருத்தலாயினன். உவமை அணி. தொள்கு - சேறு; வலை எனலுமாம். முன் பாடலில் புன்சிரிப்புச் (நகை வர) சிரித்தவன் இங்கு வெடிபடச் சிரித்தான் என்றது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He is ashamed; he lets his crowned head droop; he bursts out laughing; again
- he broods; "Is this, too, some lofty dharma?" he thinks;
- like a mighty, fierce, fine elephant in rut that has fallen into a deep pit
- and lies there in the mire, he lies in anguish, broken and fainting.
What the poem says
Vālī's feelings swing between shame, harsh laughter and bitter thought. He had believed Irāmaṉ was righteousness itself; can this be righteousness?
He is compared to a wild bull elephant caught in a pit trap. Elephant hunters dug a deep pit and tethered a tame female nearby; the male rushed toward her, fell in, and was then bound and led away. Vālī too has been caught by a trick. In the previous verse he only smiled; now he laughs aloud.