கம்பராமாயணம் 4105 · கிட்கிந்தா 7.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இறை திறம்பினனால் - தலைமைத் தன்மை உடைய இராமன் முறை தவறினன் என்றால்; இழிந்துளோர் இயற்கை என்னே - (இனி) இழிந்தோராகிய சிறியார் இயல்பு என்னாகும்? என்னின் முறை திறம்பினனால் - அதுவும் என் திறத்தின் நீதிமுறை தவறினானே! என்று மொழிகின்ற - என்று சொல்கின்ற; முகத்தான் முன்னர் - முகத்தினனாகிய வாலியின் முன்னே; மறை திறம்பாத - வேத நெறியில் தவறாத; வாய்மை மன்னர்க்கு - வாய்மை ஒழுக்கத்தினரான அரசர்களுக்கென்று; முன்னம் சொல்லும் துறை - முன் மனு முதலிய நூல்களில் கூறப்பெற்ற அறநெறிகளை; திறம்பாமல் காக்க - வழுவாமல் காத்தல் பொருட்டு; தோன்றினான் - (உலகில்) தோன்றியவனான இராமன்; வந்து தோன்ற - வந்து தோன்ற...
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடராய், இதன் கண் உள்ள 'தோன்ற' எனும் எச்சம் 'கண்ணுற்றான்' என அடுத்த பாடலில் வரும் வினை கொண்டு முடியும். மனு முதலிய அற நூல்கள் வேதத்தின் பொருளை ஒட்டியே எழுதப்படுவன. அரசர்களுக்குரிய நெறிமுறைகளைக் காக்கவே தோன்றியவன் இராமன். அறங்காக்கத் தோன்றியவன் என்பதை 'மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மாதவம் அறத்தொடும் வளர்த்தார்' (97), "அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்" (1349), 'அறம் தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைத்த நீதித், திறம் தெரிந்து, உலகம் பூணச் செந்நெறி செலுத்தி, தீயோர் இறந்து உக நூறி, தக்கோர் வாலியின் முன்னர் இராமன் தோன்றியது, தான் வாலியைத் தண்டித்தது க்க. ஒத்த செயலே என்பதை உணர்த்தல் பொருட்டாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If the lord himself swerves, what becomes of the ways of lesser beings? In my case
- he has swerved from justice," so he was saying, his face showing it, when before him,
- to guard without swerving the path laid down long ago for kings
- whose truth never swerves from the Veda, the one born for this came and appeared.
What the poem says
As Vālī says that if the great swerve from the right path the lowly will have no guide, Irāmaṉ steps out of hiding and stands before him. The poet stresses that Irāmaṉ was born precisely to protect the laws that ancient books, following the Vedas, set down for kings.
The sentence runs on into the next verse, where Vālī sees him. The repeated word "swerve" (tiṟampu) runs through all four lines: Vālī accuses Irāmaṉ of swerving, and the poet insists Irāmaṉ came so that the law would not swerve.