கம்பராமாயணம் 4115 · கிட்கிந்தா 7.93

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வீரம் அன்று ; விதி அன்று ; மெய்ம்மையின்
வாரம் அன்று ; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று ; பகை அன்று ; பண்பு ஒழிந்து ,
ஈரம் அன்று இது ; என் செய்தவாறு நீ ? '

பொருள் · Meaning in Tamil

வீரம் அன்று - (நீ செய்த இச்செயல்) வீரத்தைக் காட்டும் செயல் அன்று; விதி அன்று - அறநூல்களில் விதிக்கப்பெற்ற விதிமுறைக்கு ஒத்ததும் அன்று; மெய்ம்மையின் வாரம் அன்று - உண்மையைச் சார்ந்ததும் அன்று; நின் மண்ணினுக்கு - உனக்கு உரிய இப்பூமிக்கு; என் உடல் பாரம் அன்று - என் உடல், சுமையும் அன்று; பகை அன்று - உனக்கு நான் பகைவனும் அல்லன்; பண்பு அழிந்து - (அங்ஙனமிருக்க), நீ உன் பெருமைக் குணம் நீங்கப் பெற்று; ஈரம் இன்றி - இரக்கம் இல்லாமல்; இது செய்தவாறு என் - இச்செயலைச் செய்தது எதற்காக?

இராமன் செய்த செயல் வீரத்திற்கோ, அறநெறி விதிக்கோ, உண்மையைச் சார்ந்த நிலைக்கோ பொருந்துவதன்று என வாலி பேசினான். நிலத்தின் சுமை குறையக் கொடியோரைக் கொல்வது அரச மரபு. ஆனால், தான் கொடியவன் அல்லன் ஆதலால் தன்னைக் கொன்றொழிக்க வேண்டியதில்லை என்பான் 'என் உடல் பாரம் அன்று' என்றான். நின் மண்ணினுக்கு - இராமன் தசரதனின் முதல் மைந்தனாதலின் நாடு அவனுக்கு உரியதாகிறது. இட்சுவாகு குல மன்னர்க்குப் பூமி முழுவதும் உரியது என்பர். "மன்னற்குப் பூமியும் அயோத்தி மாநகரம் போலுமே" (174) எனத் தசரதன் சிறப்பிக்கப் பெற்றமை காண்க. பண்பு - 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' (கலி - 133) என்றமை நோக்குக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "It is not valour; it is not the law; it is not on the side
  2. of truth; my body was no burden on your earth;
  3. nor was I your enemy; casting off your nobility,
  4. without pity, why have you done this?"

What the poem says

In short, sharp phrases, Vālī sums up his charge. The deed was not brave, not lawful and not true. Kings kill the wicked to lighten the earth's burden, but Vālī was no such burden on Irāmaṉ's earth, the earth of the Ikṣvāku kings; nor had he ever been Irāmaṉ's enemy. Why, then, did Irāmaṉ give up his noble nature and his compassion to do this?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vīram aṉṟu; viti aṉṟu; meymmaiyiṉ
vāram aṉṟu; niṉ maṇṇiṉukku eṉ uṭal
pāram aṉṟu; pakai aṉṟu; paṇpu aḻintu,
īram iṉṟi itu eṉ ceytavāṟuarō? '