கம்பராமாயணம் 4122 · கிட்கிந்தா 7.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று - என்று இவ்வாறு; எயிறு பொடிபடத் தின்று - சினத்தால் பற்கள் பொடியாகும்படிக் கடித்து; காந்தி - சினந்து; விழி வழித் தீ உக - கண்களின் வழியாகத் தீப்பொறி சிதற; அன்று அவ் வாலி தானும் - அப்பொழுது அந்த வாலியானவன்; அனையன சொல்லினான் - (மேற்கூறிய) அத்தன்மையனவான சொற்களைச் சொன்னான்; நின்ற வீரன் - (அவற்றைக் கேட்டு) எதிரில் நின்றிருந்த இராமன்; இனைய நிகழ்த்தினான் - இத்தகைய வார்த்தைகளைப் (பின்வருமாறு) சொல்லலானான்.
எயிறு பொடிபடத் தின்று, காந்தி, விழி வழித் தீ உக என்பது வாலியின் சினத்தை உணர்த்தும் மெய்ப்பாடுகளாகும். வீரன் என்ற கவிக் கூற்றால் இராமன் வீரத்துக்கு இழுக்கு இல்லை என்பதை நுட்பமாகச் சுட்டினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So he spoke, grinding his teeth
- to powder, blazing with rage, fire pouring from his eyes;
- then Vālī said such things as these;
- and the hero standing there replied in these words.
What the poem says
A narrative pause. Vālī ends his accusations, grinding his teeth and glaring fire. Irāmaṉ, still standing before him, begins to answer. By calling him "the hero" at this point, the poet quietly signals that Irāmaṉ's valour is not in fact stained.