கம்பராமாயணம் 4123 · கிட்கிந்தா 7.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிலம்புக்காய் - (முன்னாளில் மாயாவி என்னும் அரக்கனைத் தொடர்ந்து) பாதாள வழியினுள்ளே சென்ற நீ; நெடுநாள் பெயராய் - நெடுங்காலம் மீண்டு வாராமலே தங்கிவிட்டாய்; எனப் புலம்புற்று - என்று வருத்தமடைந்து; உன் வழிப் போதலுற்றான் தனை - நீ சென்ற பாதாள வழியிலேயே உன்னைத் தொடர்ந்து தேடிச் செல்ல முற்பட்ட உன் தம்பியாகிய சுக்கிரீவனை (நோக்கி); குலம்புக்கு ஆன்ற முதியர் - (உங்கள்) குலத்தில் தோன்றி அறிவால் நிறைந்த பெரியோர்கள்; அலம்பொன் தாரவனே - அசைகின்ற பொன் மாலையை அணிந்தவனே! குறிக்கொள் - (நாங்கள்) சொல்வதை ஊன்றிக் கேட்பாயாக; நீ அரசு - நீயே எமக்கு அரசனாவாய்; என்றலும் - என்று கூறிய அளவில். . .
இதுவும் அடுத்துவரும் இரு பாடல்களும் குளகமாய் இயைந்து ஒருவினை கொண்டு முடியும். முதலில் சுக்கிரீவனிடத்துக் குற்றம் இல்லாமையினையும், வாலியிடத்துக் குற்றம் இருத்தலையும் இராமன் சுட்டிக் காட்டலானான். குலம் புக்கு ஆன்ற முதியர் - குலத்தாலும் அறிவாலும் சிறந்த பெரியோர். நெடு நாள் - இருபத்தெட்டு மாதம். வாலியைக் காணாது அவனைத் தேடிச் செல்ல முற்பட்ட சுக்கிரீவனை முதியவர்கள்தான் 'நீயும் பிலத்துவழியில் சென்று விட்டால் என்ன ஆவது? எங்களைக் காப்பாற்றுவார் யார்? நீயாவது ஆட்சி ஏற்ற எம்மைக் காப்பாய்' என வேண்டித் தடுத்து நிறுத்தினர் என்பதாம். சுக்கிரீவன் இறக்கத் துணிந்தமையை மனத்தில் கொண்டு இங்ஙனம் தடுத்து நிறுத்தினர் என்க. அலம்பு என்பது 'அலம்' எனக் குறைந்துவந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'You went into the cave and did not come back for a long time,' he
- lamented, and set out to follow your path; and to him
- the elders of the clan, full of wisdom, said, 'Take heed:
- you, who wear the swaying golden garland, are now our king';
What the poem says
Irāmaṉ begins his reply, one sentence running over three verses. First he shows that Cukkirīvaṉ did nothing wrong. Long ago Vālī chased the demon Māyāvi into an underground cave and did not come out for a long time, twenty-eight months by one account. Grieving, Cukkirīvaṉ was about to go in after him, ready to die.
The wise elders of the clan stopped him, saying the kingdom needed a ruler, and asked him to be their king.