கம்பராமாயணம் 4124 · கிட்கிந்தா 7.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என் தம்முனை - (அதைக் கேட்ட சுக்கிரீவன்) என் தமையனான வாலியை; வானம் ஆள வைத்தவன் - விண்ணுலகை ஆளும்படி செய்தவனாகிய மாயாவி; தானும் மாள - தானும் இறந்தொழியும்படியும்; கிளையும் இற - (அவன்) சுற்றத்தவர்களும் அழியும்படியும்; தடிந்து - கொன்று; யானும் மாள்வேன் - நானும் இறப்பேன்; இருந்து அரசு ஆள்கிலேன் - (என் தமையன் இறந்த பின்னர் நான் மட்டும்) உயிருடன் இருந்து அரசாட்சி செய்யமாட்டேன்; ஊனம் ஆன உரை - (எனக்குப்) பழி தரும் சொற்களை; பகர்ந்தீர் என - சொன்னீர்கள் என்று கூற. . ..
அப்பிலத்தினுள்ளே மாயாவி வாலியைக் கொன்று விட்டான் எனத் தவறாகக் கருதியதால் 'என் தம் முனை வானமாள வைத்தவன்' என்றான். வீரர்கள் புகுவது விண்ணுலகு ஆதலின் 'வானம் ஆள' என்றான். தன் தமையனைக் கொன்றவனைச் சுற்றத்தோடு அழித்துத் தானும் இறப்பதே தனது கருத்து அன்றிப் பகைவனைக் கொல்லும் திறமின்றிப் பழிபயக்கும் இவ்வுடம்பினைத் தாங்கிக் கொண்டு ஆட்சி புரிவதன்று என்பதை 'இருந்து அரசு ஆள்கிலேன்' என்றான். வாலியைக் காணாது வருந்திய சுக்கிரீவனை அரசு ஏற்குமாறு வேண்டுதலும், சுக்கிரீவன் மாயாவியைத் தேடிக் கொன்று தானும் இறப்பதாகக் கூறுதலுமாகிய செய்திகள் 3838, 39, 40 பாடல்களாலும் கூறப் பெற்றமை காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'Him who sent my elder brother to rule in heaven,
- I will strike down so that he dies and his kin die with him,
- and then I too will die; I will not live on and rule;
- you have spoken words that bring me shame,' he said;
What the poem says
Irāmaṉ continues quoting Cukkirīvaṉ's reply to the elders. Believing that the demon Māyāvi had killed Vālī in the cave, "sent him to rule in heaven" as heroes do when they die, Cukkirīvaṉ refused the throne. He would hunt down the killer and his whole clan, and then die himself. To sit and rule after his brother's death would be a disgrace.