கம்பராமாயணம் 4125 · கிட்கிந்தா 7.103

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பற்றி , ஆன்ற படைத் தலை வீரரும்
முற்று உணர்ந்த முதியரும் முன்பரும்
'இற்றது , உம் அரசு , எய்தலையேல் ' என ,
கொற்ற நன் முடி கொண்டது , இக் கோதிலான் . '

பொருள் · Meaning in Tamil

ஆன்ற படைத் தலை வீரரும் - (அது கேட்டு) ஆற்றல் நிறைந்த படைத்தலைவர்களாகிய வீரர்களும்; முற்று உணர்ந்த முதியரும் - (அரசியல் நெறிகளை) முழுவதும் உணர்ந்த அமைச்சர் போன்ற அனுபவம் மிக்கவர்களும்; முன்பரும் - (மற்றுமுள்ள) பெரியோர்களும்; எற்றும் - (நிகழ்ந்த செயல்) எத்தன்மைத்து ஆயினும்; நும் அரசு எய்துவையாம் - உங்கட்குரிய அரசாட்சியை நீ அடைவாயாக; என - என்று கூறி வற்புறுத்த; இக்கோது இலான் - (அதனால்) குற்றமற்ற இந்தச் சுக்கிரீவன்; கொற்ற நன்முடி கொண்டது - வெற்றிக்கு அறிகுறியான மணிமுடியைச் சூட்டிக் கொள்ள நேர்ந்தது.

'நும்மரசை நீயே பெறுக' எனப் படைத்தலைவர் முதலியோர் வற்புறுத்தலே சுக்கிரீவன் அரசை ஏற்கவேண்டி வந்ததால் அவன்மீது குற்றமில்லை என இராமன் உணர்த்தினான். எற்றும் - வாலி, மாயாவி ஆகியோரின் செய்தி எவ்வாறாயினும் என்பது பொருள். நும் அரசு - வானரக் குலத்திற்குரிய அரசாட்சி. 'அரிகள் ஆணையால் கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம்?' (3841) என முன்னர்க் கூறியதும் காண்க. கொண்டது - தொழிற்பெயர் வினைமுற்றின் தன்மையடைந்தது. 'கோது இலான்' என இராமன் சுக்கிரீவனைக் குறித்தல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "then the mighty captains of the army, holding him back,
  2. the elders who knew all things, and the great ones,
  3. said, 'Whatever has happened, this kingdom is yours; take it,'
  4. and so this faultless one took the crown of victory."

What the poem says

Irāmaṉ concludes this part of the story. The army's captains, the wise elders and the leading monkeys held Cukkirīvaṉ back and insisted that, whatever had become of Vālī and Māyāvi, the monkeys' kingdom needed him. Only under that pressure did he accept the crown. So, Irāmaṉ says, he is "faultless".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṟṟi, āṉṟa paṭait talai vīrarum
muṟṟu uṇarnta mutiyarum muṉparum
'eṟṟum num aracu, eytuvaiyām ' eṉa,
koṟṟa naṉ muṭi koṇṭatu, ik kōtu ilāṉ. '