கம்பராமாயணம் 4128 · கிட்கிந்தா 7.106

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”
''
” ''
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஊற்றம் முற்று உடையான் , ” உனக்கு ஆர் அமர்
தோற்றும் '' என்று தொழுது உயர் கையனைக்
” கூற்றம் உண்ணக் கொடுப்பன் '' என்று எண்ணினாய் ;
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் . '

பொருள் · Meaning in Tamil

ஊற்றம் உற்று உடையான் - வலிமை முழுவதும் நிரம்பப் பெற்றுடையான் ஆயினும்; உனக்கு ஆர் அமர் தோற்றும் - (உன்னோடு போரிடல் தகுதியன்று எனக் கருதி) 'வெல்லுதற்கரிய போரில் உனக்குத் தோற்றோம்' (யாம்); என்று தொழுது உயர் கையனை - என்று கூறி (உன்னை) வணங்கி உயர்த்திக் கூப்பிய கைகளையுடைய சுக்கிரீவனை; கூற்றம் உண்ணக் கொடுப்பென் - 'யமன் உண்ணும்படிக் கொடுப்பேன்' என்று எண்ணினாய் - என்று நினைத்தாய்; நால் திசைக்கும் - (அதனால் அவன் அஞ்சி) நான்கு திசைகளின்; புறத்தையும் நண்ணினான் - கடை எல்லைகளையும் விரைந்து அடைபவனானான்.

தோற்றும் - தன்னைச் சார்ந்தாரையும் உளப்படுத்துப் பன்மையால் கூறினான். உயர்கை - தலைமேல் உயர்த்திக் கூப்பிய கை; கூற்றம் - தொழிலாகு பெயராய் யமனைக் குறித்தது. எதிர்க்கும் வலிமையற்றோர், பிழைக்க எண்ணின் கை உயர்த்தித் தொழுதல் மரபாகும். கை கூப்பித் தொழுத தம்பியைக் கூற்றுவனுக்குக் கொடுக்க முற்பட்ட வாலியின் செயல் போர்நெறியில் பழிதரும் இழிசெயலாகும் என இராமன் எடுத்துரைத்தான் என்க. "அழிகுநர் புறக்கொடை அயில் வாளோச்சாக் கழிதறுகண்மை காதலித்து உரைதன்று" (பு. வெ. மாலை. வஞ்சி. தழிஞ்சி.20) என்ற போர் அறம் வாலியிடம் இல்லையே என்பது குறிப்பு. "பேராண்மை என்பதறுகண் ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு" (குறள் - 773) என்ற குறளும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Though he was full of strength, he said, 'In this hard fight
  2. we are beaten by you,' and raised his joined hands in worship; yet him
  3. you meant to give to Death to swallow;
  4. and he fled beyond the four quarters."

What the poem says

Cukkirīvaṉ was strong, yet he would not fight his brother. He admitted defeat and raised his joined hands above his head, the gesture of surrender. Vālī still meant to kill him, and Cukkirīvaṉ had to flee to the ends of the earth.

Old Tamil warrior codes forbid striking one who turns his back or surrenders; as the Tirukkuṟaḷ says, the edge of true valour is kindness to the fallen. Vālī broke that rule.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ūṟṟam uṟṟu uṭaiyāṉ, ” uṉakku ār amar
tōṟṟum '' eṉṟu toḻutu uyar kaiyaṉai
” kūṟṟam uṇṇak koṭuppaṉ '' eṉṟu eṇṇiṉāy;
nāl ticaikkum puṟattaiyum naṇṇiṉāṉ. '