கம்பராமாயணம் 4129 · கிட்கிந்தா 7.107

Section கிட்கிந்தா காண்டம் / 7. வாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்ன தன்மை அறிந்தும் , அருளலை ;
பின்னவன் இவன் என்பதும் பேணலை ;
வன்னிதான் இடு சாப வரம்புடைப்
பொன் மலைக்கு இவன் நண்ணலின் , போகலை ; '

பொருள் · Meaning in Tamil

அன்ன தன்மை அறிந்தும் - அங்ஙனம் அவன் அஞ்சி ஓடி ஒளிந்து கொண்ட நிலையை அறிந்தும்; அருளலை - நீ அவன் மீது அருள் காட்டவில்லை; இவன் பின்னவன் என்பது பேணலை - இவன் (உனது) தம்பி என்பதையும் எண்ணிப் பேணாது விட்டாய்; வன்னி தான் இடு - மதங்க முனிவர் இட்ட; சாப வரம்புடை - சாபமாகிய தடை எல்லையை உடைய; பொன் மலைக்கு - அழகிய ருசிய முகமலைக்கு; அவன் நண்ணலின் - அச்சுக்கிரீவன் சென்று சேர்ந்ததால்; போகலை - நீ அங்குச் செல்லவில்லை. (அதனால் அவன் உயிர் பிழைத்தான் என்பதாம்).

அஞ்சி ஓடியவன்மீது அருள் காட்டாமையும், தம்பி என்ற உறவு கருதாது அன்பில்லாமல் நடந்து கொண்டதும் வாலிபால் காணப்படும் குற்றங்களாம் என இராமன் எடுத்துக் காட்டினான். சாபத்திற்கு அஞ்சி, அந்தச் சுக்கிரீவன் உள்ள இடத்திற்கு வாலி செல்லாததால் சுக்கிரீவன் உயிர்பிழைத்திருந்தான் என்பதையும் உணர்த்தினான். வன்னிசாபம் - 'இங்கு வாலி வந்தால் தலை வெடித்து இறப்பானாக' என்பது. 'இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் - முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால்' (3651) என்றது காண்க. ஈண்டுப் பொன்மலை என்றது 'ருசியமுக பர்வதம்' என்னும் அழகிய மலையினை. பொன் - அழகு. அருளலை, பேணலை, போகலை என்பன முன்னிலை ஒருமைவினைமுற்றுக்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Though you knew how things stood, you showed no grace;
  2. you did not regard that this was your younger brother;
  3. only because he reached the golden mountain bounded by the curse
  4. the fire-sage laid did you not go after him."

What the poem says

Even after Cukkirīvaṉ fled in fear, Vālī showed no mercy and forgot that he was his brother. Cukkirīvaṉ survived only because he took refuge on Mount Ṛśyamūka, which Vālī could not enter: the sage Mataṅga had cursed him to die, his head bursting, if he ever set foot there. Irāmaṉ's point is that Vālī held back because of the curse, not out of any kindness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉa taṉmai aṟintum, aruḷalai;
piṉṉavaṉ ivaṉ eṉpatum pēṇalai;
vaṉṉitāṉ iṭu cāpa varampuṭaip
poṉ malaikku avaṉ naṇṇaliṉ, pōkalai; '