கம்பராமாயணம் 4133 · கிட்கிந்தா 7.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆதலானும் - (நீ இவ்வாறெல்லாம் செய்தாய்) ஆதலாலும்; அவன் எனக்கு - அந்தச் சுக்கிரீவன் எனக்கு; ஆருயிர்க் காதலான் எனலானும் - அரிய உயிர் போன்ற நண்பன் ஆனதாலும்; நின் கட்டனென் - உன் உயிரைப் பறித்தேன்; ஏதிலாரும் - அயலாராயினும்; எளியர் என்றால் - (தீயோரால்) துன்புறுத்தப்படும் எளிய நிலையினர் என்றால்; அவர் தீது தீர்ப்பது - அவர்களது துன்பத்தைப் போக்குவது; என் சிந்தைக் கருத்து - என்னுடைய உள்ளக் கருத்தாகும்.
ஆதலான் என்றது முன் கூறியவற்றைக் குறித்தது. வாலி பெரும்பிழை செய்தமையாலும், சுக்கிரீவன் தன் நண்பன் ஆனதாலும், எளியோரைக் காப்பதைத் தான் கொள்கையாகக் கொண்டதாலும் சுக்கிரீவனைக் காக்க வாலியைக் கொல்ல வேண்டியதாயிற்று என்று இராமன் கூறினான். நிற் கட்டனென் - களை பறிப்பது போலப் பறித்ததைக் குறிக்கும். வாலி அறம் வளராமல் தடுக்கும் களையாக இருந்தமை புலப்படுத்தப் பெற்றது. நிற்கட்டனென் - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
'பிலம்புக்காய்' என்பது முதல், 'ஆதலானும்' என்னும் இப்பாடல் வரையுள்ள பதினொரு பாடல்களும், இராமன் தான் வாலியைக் கொன்ற செயல் அறத்தொடு பொருந்தியதே என்பதை வாலிக்கு உணர்த்தும் வகையில் அமைந்தனவாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "For these reasons, and because he is a friend
- dear to me as life, I uprooted you;
- even strangers, if they are weak,
- to rid them of harm is the purpose of my mind."
What the poem says
Irāmaṉ sums up his reasons. Vālī committed grave wrongs; Cukkirīvaṉ is his dear friend; and it is Irāmaṉ's settled principle to protect the weak from the wicked, even strangers. So he had to kill Vālī to save Cukkirīvaṉ.
The word used for killing means "weeded out": Vālī was a weed choking the growth of dharma. This verse closes the eleven verses of Irāmaṉ's defence.