கம்பராமாயணம் 4134 · கிட்கிந்தா 7.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பிழைத்த தன்மை இது என - 'நீ தவறு செய்த விதம் இது' என்று; பேர்எழில் தழைத்த வீரன் - மிக்க அழகு நிரம்பிய வீரனாகிய இராமன்; உரை செய - வாலிக்கு எடுத்துரைக்க; தக்கிலாது இழைத்த வாலி - தகாத செயலைச் செய்த வாலி; இத்துணை - (நீ கூறிய) இவ்வளவு நீதிகளும்; இயல்பு அல - வானரங்களான எமக்குப் பொருந்துவன அல்ல; விழைத்திறம் தொழில் - விரும்பியவாறு தொழில் செய்வதே (எமக்கு உரியது); என்ன - என்று கூறி; விளம்புவான் - மேலும் சொல்பவனானான்.
பேரெழில் தழைத்தல் - செழித்து விளங்கும் பேரழகு. பேரெழில் தழைத்த வீரன் என்றது இராமனை. 'மானிடற்க எண்ணுங்கால், இவ் இலக்கணம் எய்திட ஒண்ணுமோ' (1088) என்றமை காண்க. தக்கிலாது - வினையாலணையும் பெயர். இயல்பல இத்துணை விழைத்திறம் என்பதற்கு - தகுதியில்லாதவனவாக நீ கூறிய இவ்வளவும் நாங்கள் விரும்பிச் செய்யத்தக்க தொழில்களாகும் எனவும் பொருள் கொள்வர். வாலி தன்மீது கூறப்பட்ட குற்றங்களை மறுக்க முயல்வதை இங்குக் காணலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "This is how you went wrong," said the hero full of great beauty;
- and Vālī, who had done what was unfitting,
- replied, "All this is not our nature;
- acting as desire leads is our way," and went on to speak.
What the poem says
Irāmaṉ has finished. Vālī, who really did do wrong, now tries to defend himself. All these rules of conduct, he says, do not apply to monkeys; it is their nature to act as their desires lead. Another reading: "what you call improper is exactly what we are free to do." He goes on in the following verses.